இன்னும் ஒரு விசை கர்த்தாவே Phoenix, Arizona, USA 63-0120E 1மாலை வணக்கம், நண்பர்களே, இன்றிரவு இங்கு வந்து, உண்மையான உற்சாகத்துடன் பாடப்பட்ட பாடல்களைக் கேட்டு, இந்த அருமையான இசை விருந்தைக் கேட்டு ரசித்தது ஒரு சிலாக்கியமே, நான் ஜிம்மியை கவனித்துக் கொண்டிருந்தேன், பாடல்களைப் பாடும் போது ஜிம்மி உணர்ச்சி வசப்படுவது போல், நாமும் நமது சொந்த வாழ்க்கையில் தேவனுடைய காரியங்கள் அனைத்திலும் உற்சாகம் கொள்ளுவோமானால், நாம் முன்னேறுவோம், அந்த பையனை நான் உண்மையில் பாராட்டுகிறேன். அவன் தந்தை எங்களுக்கு நெருங்கிய நண்பர். ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். ''அதை பேசித் தீர்மானிக்க விரும்புகிறேன்'' என்று அந்த பெண்கள் பாடினார்களே, பல ஆண்டுகளுக்கு முன்பு நான் இங்கு வந்திருந்த போது பாடின அதே பாடற்குழுவா இது? அந்தப் பாடலை நான் எங்கெல்லாமோ தேடிக் கண்டு பிடிக்க முயன்றேன். எனக்கு சோதனைகள் நேர்ந்த இருளின் நேரத்தில், ''நான் பேசித் தீர்மானிக்க விரும்புகிறேன்'' என்று எண்ண முயன்றுள்ளேன். ஜிம்மி மக்கயர், அந்த பாடலை ஒலிப்பதிவு செய்திருக்கிறாயா? அப்படி செய்திருப்பாயென நம்புகிறேன். பாருங்கள்? அதை இசைத் தட்டில் பதிவு செய்திருக்கிறாயா? அப்படியானால், அது எனக்கு வேண்டும். ''என்பாதை மங்கலாயிருக்கும் போது, அவர் என்னை நேசிப்பார்,'' என்று நான் எண்ண முயன்றுள்ளேன். பாருங்கள்? அந்த அழகான சீயோன் பாடலை நான் நிச்சயம் ரசித்தேன். 2நான் கேள்விப்படுகிறேன், எனக்கு நிச்சயமாக தெரியவில்லை, அடுத்த ஞாயிறு நடக்கவிருக்கும் வர்த்தகரின் கன்வென்ஷனில் இதே பாடற்குழு பாடப் போகிறதென்று நினைக்கிறேன். அது சரியென்று நினைக்கிறேன் - நான் தவறாகப் புரிந்து கொள்ளவில்லையென்றால், அடுத்த ஞாயிறு இரண்டு மணிக்கு. இந்த விதமாக பாடுதல் உங்களுக்குப் பிரியம். நமக்காக மறுபடியும் பாடுவதற்கென அவர்கள் அங்கிருப்பார்கள். நாளை இரவு அவர்களை டூசானுக்குக் கொண்டு சென்று, அங்கு பாடவைக்க வேண்டும். அது ஜனங்களுக்கு ஆசீர்வாதமாயிருக்குமென்பது உறுதி. நாளை இரவுடூசான் வாத்தகரின் சங்கம். டூசானிலுள்ள ரமாதா சத்திரத்தில் நாங்கள் நாளை இரவு இருப்போம். பீனிக்ஸ் டூசானின் எல்லைப் புறத்தில் உள்ளதென்று உங்கள் அனைவருக்கும் தெரியும். பாருங்கள்? அரிசோனாவின் மகத்தான பொருளாதாரத்தில் கூட்டாளி குடிமக்கள் என்னும் முறையில், நீங்கள் அனைவரும் அங்கிருப்பதில் நாங்கள் மகிழ்ச்சி கொள்வோம். நாங்கள் மலையின் மேல் உள்ளோம். நீங்கள் பள்ளத்தாக்கில் இருக்கிறீர்கள். நாங்கள் உங்களைக் காட்டிலும் சுமார் இரண்டாயிரம் அடி உயரத்தில் உள்ளோம் என்பதை ஞாபகம் கொள்ளுங்கள், பாருங்கள். எனவே அந்த நகரத்தின் எல்லைப் புறத்திலுள்ள உங்களுடன் இன்றிரவு ஐக்கியங் கொள்ளுவதைக் குறித்து நாங்கள் நிச்சயம் மகிழ்ச்சியடைகிறோம். நாளை இரவு அரிசோனாவின் முக்கிய இடத்தில் டூசான் வர்த்தக சங்கத்தினரின் விருந்து நடைபெறும் என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். அதற்கடுத்த நாள் இரவு நாங்கள் - அந்த சபையின் பெயர் மறந்துவிட்டது, அது தென்பாகம் அசெம்பிளி. பிறகு புதன் இரவு நாங்கள் இலெவன்த் அண்டு கார்ஃபீல்டு என்னுமிடத்தில் இருப்போம் - அங்குள்ள அசெம்பிளிஸ் ஆஃபகாட் சபை என்று நினைக்கிறேன். பிறகு வியாழனன்று கன்வென்ஷன் துவங்குகிறது. 3நீங்கள் மிகவும் நல்லவர்கள், இந்த வாரம் அருமையான ஐக்கியத்தின் தருணம் எங்களுக்கிருந்தது - மாரிகோபா பள்ளத்தாக்கிலும் உள்ள சபைகளுடன் கூட. நாங்கள் எதிர்பார்த்ததை விட கர்த்தர் எங்களை அபரிமிதமாக ஆசீர்வதித்தார். இடங்கள் ஜன நெருக்கம் கொண்டு ஜனங்கள் வெளிப்புறத்தில் நின்று கொண்டிருந்தனர். வார்த்தையின் பேரில் ஒரு மகத்தான ஐக்கியம் உண்டாயிருந்தது. போதகர்கள் வருகை தந்தனர். நான் போதகராகிய சகோ. அவுட்லாவைக் கண்டேன். நாங்கள் நடத்தின ஒவ்வொரு ஆராதனையிலும் அவரைப் கண்டேன் என்று நினைக்கிறேன். மற்றவர்கள் ஒரு சபையிலிருந்து மற்றொரு சபைக்கு வந்திருந்தனர். அப்படித்தான் செய்ய வேண்டும். ஒருவரோடொருவர் ஐக்கியங் கொள்ளுதல் என்பது எனக்கு மிகவும் பிரியம். 4வயோதிப சகோ. பாஸ்வர்த் மகிமைக்குள் பிரவேசித்து மூன்று நான்கு ஆண்டுகளாகி விட்டன. அவர் என்னிடம், ''சகோ. பிரன்ஹாமே, ஐக்கியம் (fellowship) என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?'' என்று கேட்டார். நான்,“தெரியும் என்று நினைக்கிறேன்'' என்று விடையளித்தேன். அவர், “இரண்டு பேர் (fellows) ஒரே கப்பலை (ship) பகிர்ந்து கொள்ளுதல் தான் அது'' என்றார். அது உண்மை. இரண்டு பேர் ஒரே கப்பலில் இருத்தல். அப்படித்தான் நாமிருக்கிறோம். இன்றிரவு நான் கூடியிருப்பவர்களைக் காணும் போது, முன்பு இங்கு கண்டிராத என் நண்பர்களை இங்கு காண்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். அவர்கள் கென்டக்கி, இந்தியானா, ஓஹையோ போன்ற இடங்களிலிருந்து இங்கு விஜயம் செய்து, இவ்விடத்தில் அமர்ந்துள்ளனர். இன்றிரவு அவர்கள் இங்கிருப்பதில் நாங்கள் நிச்சயம் மகிழ்ச்சியடைகிறோம். நீங்கள் மற்ற கூட்டத்துக்கும் வந்திருக்கக் கூடும். ஆனால் அது பெரிய கட்டிடமாக இருந்தபடியால், உங்களை கண்டுபிடிக்க முடியவில்லை. கர்த்தர் தாமே உங்களை அதிகமாய் ஆசீர்வதிப்பாராக. 5நான் இங்கு சிறிது நேரம் தங்கப் போகின்றேன். இன்றிரவு என் குடும்பத்தினரை காரில் கூட்டிச் செல்ல வேண்டும். நாளை டூசானில் நடக்க விருக்கும் கூட்டத்துக்கு நாங்கள் ஆயத்தமாக வேண்டும். எனவே ஆராதனைக்குப் பிறகு இன்றிரவு நாங்கள் புறப்பட்டுச் செல்ல வேண்டும். அது நூற்றிருப்பதைந்து மைல் தொலைவில் உள்ளது, நீளமான வனாந்தரப்பகுதி, எனக்குத் தூக்கமாயும், களைப்பாகவும் உள்ளது. எனவே உங்களை வேகமாக அனுப்பிவிட முயல்கிறேன். இன்று காலை நான் தீர்க்கதரிசியை மலையின் உச்சிக்குக் கொண்டு சென்றேன். நான்... அது நேற்று இரவு, அல்லவா? இன்று காலை வேறொன்றைக் குறித்து நாம் பேசினோம். உங்கள் வேலைக்கு நீங்கள் தாமதமாகச் சென்றால், எனக்குப் பரவாயில்லை. நீங்கள் அவ்வப்போது ஓரிரண்டு நாட்கள் செல்லாமலிருந்தால் பரவாயில்லை. ஆனால் ஞாயிறு பள்ளிக்கு வருவதற்கு மாத்திரம் தவற வேண்டாம். பாருங்கள், எனவே நீங்கள் ஞாயிறு பள்ளிக்கு வர வேண்டுமென்று நாங்கள் விரும்புகிறோம். 6இன்றிரவு நாம் வார்த்தையை அணுகுவதற்கு முன்பு, ஆக்கியோனை ஜெபத்தின் மூலம் அணுகுவோம். அதற்கு முன்பு, இந்த அருமையான பாடல் குழுவினருக்கு - இந்த தேவனுடைய பிள்ளைகளுக்கு - இதைக்கூற விரும்புகிறேன். அவர்கள் அருமையாக பாடினதற்காக அவர்களை நிச்சயம் பாராட்டுகிறேன். சகோ. மூர் ஆராதனையை என்னிடம் ஒப்படைத்துவிட்டு மெல்ல நழுவிவிட்டார். நான் ஆராதனையை அவரிடம் ஒப்படைக்க வேண்டுமென்றிருந்தேன். ஆனால் அவர் வெளியே நழுவி விட்டார். அவருடைய அழகிய மனைவி இங்கு உட்கார்ந்திருப்பதைக் காண்கிறேன். இப்பொழுது நாம் ஜெபத்திற்காக தலை வணங்குவோம். 7கர்த்தராகிய இயேசுவே, இன்றிரவு மறுபடியுமாக உம்மிடம் வந்து, நீர் எங்களுக்கு அளித்துள்ள எல்லாவற்றிற்காகவும் உமக்கு முதலாவதாக நன்றி செலுத்துகிறோம். எல்லாவற்றிற்கும் மேலாக, நீர் எங்களுக்கு நித்திய ஜீவனைத் தந்திருக்கிறீர், அதுவே பிரதானமாயுள்ளது. நாங்கள் மறுபடியும் சந்திப்போம் என்று அறிந்திருக்கிறோம்; இவ்வுலகில் அல்ல, இனி வரப்போகும் உலகில். உமது வார்த்தையை இன்றிரவு ஆசீர்வதியும். இந்த பாடல்களை நீர் ஆசீர்வதித்ததற்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். நீர் தொடர்ந்து, பாடல்களையும், பாடகர்களையும், இச்சபையின் போத கரையும், கூட்டாளி போதகர்களையும், மூப்பர்களையும், தர்மகர்த்தாக்களையும், இது எதற்காக நிற்கின்றதோ அவையனைத்தையும் ஆசீர்வதிக்க வேண்டுமென்று ஜெபிக்கிறோம். பிதாவே, இவர்களை ஆசீர்வதியும். இன்றிரவு அளிக்கப்படவிருக்கும் செய்தியை - அதற்கென்று தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்த சில வார்த்தைகளை - ஆசீர்வதிக்குமாறு ஜெபிக்கிறோம். அதனுடன் சந்தர்ப்பத்தை நீர் சேர்த்து, உமது ஆசீர்வாதங்களை எங்களுக்கு அருளுமாறு ஜெபிக்கிறோம். வியாதியஸ்தர் அனைவரையும் துன்பப்படுகிறவர்களையும் நீர் சுகப்படுத்தும். இன்றிரவு மனிதரும், ஸ்திரீகளும் தரிசனத்தை கிரகித்துக் கொண்டு, இக்கடைசி நாளுக்கென தேவன் வகுத்துள்ள திட்டம் என்னவென்பதை அறிந்து கொள்வார்களாக! நாங்கள் செய்ய வேண்டிய ஒன்றே ஒன்று அவருடைய திட்டத்துக்குள் நுழைந்து கொள்ளுதலே, அப்பொழுது மற்றெல்லாமே தானாகவே சரியாக அமைந்து விடும். அப்படித்தான் அவர் எங்களுக்குக் கற்பித்துள்ளார். அவர், ''முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும், அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்கு கூட கொடுக்கப்படும்'' என்றார். எனவே, இன்றிரவு நாங்கள் இராஜ்யத்தின் ஆசீர்வாதங்களுக்கு, இராஜ்யத்தின் திட்டத்துக்கு திரும்ப வந்து, உம்மைக் குறித்து அறிந்துகொள்ள அருள் புரியும். இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென். 8நான் அதிகமாக பேசி வந்த காரணத்தால், என் தொண்டை சிறிது கரகரப்பாயுள்ளது. இங்கு உஷ்ணமாயுள்ளதென்று அறிவேன். நின்று கொண்டிருக்கும் எல்லாருக்காகவும் முக்கியமாக சுவற்றண்டை நின்று கொண்டிருக்கும் ஸ்திரீகளுக்காகவும், அறையில் நின்று கொண்டிருப்பவர்களுக்காகவும் நான் வருந்துகிறேன். கூடுமானவரை நான் வேகமாக முடிக்கப் பார்க்கிறேன். நான் படிக்கும் போது அல்லது பேசும்போது, எங்கும் பிரசன்னமாயுள்ள தேவன் இங்கும் பிரசன்னராயிருக்கிறார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். சென்றமுறை நாங்கள் இங்கிருந்த போது, ஒரு சகோதரன் வலிப்பு நோயால் அவதியுறும் ஒருவரைக் குறித்து கூறினார். தேவனால் புற்று நோயையும், வலிப்பையும், அது எதுவாயிருந்தாலும் சுகப்படுத்த முடியும். அவர் ஏற்கனவே அதை செய்து முடித்து விட்டார். நீங்கள் மாத்திரம் அதை விசுவாசிக்கும்படி அவரால் செய்யக்கூடுமானால் நீங்கள் இன்றிரவு இரட்சிக்கப்படவில்லை, நீங்கள் ஆயிரத்து தொளாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இரட்சிக்கப்பட்டு விட்டீர்கள். ஒருக்கால் இன்றிரவு அந்த இரட்சிப்பை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள். ஆனால் அதற்கான கிரயம் ஏற்கனவே செலுத்தப்பட்டு விட்டது, கடன் செலுத்தி தீர்க்கப்பட்டது. உங்களை அடகு கடையில் பிசாசு வைத்திருந்தான். இயேசு வந்து உங்களை மீட்டுக் கொண்டு, கதவுகளைத் திறந்துவிட்டார். நீங்கள் செய்ய வேண்டிய ஒன்றே ஒன்று வெளியே நடந்து வந்து உங்கள் விடுதலையை உரிமை கோருவதே. அவ்வளவுதான். கடன் செலுத்தி தீர்க்கப்பட்டது என்பதற்கு அடையாளமாக நீங்கள் இயேசுவிடமிருந்து ரசீதை பெற்றிருக்கிறீர்கள். இயேசு, ''முடிந்தது'' என்று தமது கடைசி வார்த்தைகளில் ஒன்றாகக் கூறினார். மீட்பின் ஆசீர்வாதம் அனைத்துமே முழுவதுமாக பெற்று முடிந்தது. தேவன் பாவத்தின் மேல் கொண்டிருந்த கொடிய கோபம், அவர் நமக்காக பாவமான போது, முடிவடைந்தது. கடன் தீர்க்கப்பட்டு விட்டது. 9சாத்தானுக்கு இனி வல்லமை இல்லை, அப்படி உள்ளதாக அவன் பொய் சொல்லத்தான் முடியும். உங்களிடம் அவன் பொய் சொல்லி உங்களை ஏமாற்றினால், நீங்கள் அதை பெற்றுக் கொள்ளத்தான் வேண்டும். ஆனால் சட்டப்பூர்வமாக, அவனுக்கு வல்லமையே கிடையாது. அவனுக்கிருந்த வல்லமை அனைத்தும் கல்வாரியில் அவனிடமிருந்து பிடுங்கப்பட்டது. அங்குதான் கிரயம் செலுத்தப்பட்டது. அவன் பொய் காரனேயன்றி வேறொருவனுமல்ல. அவனுடைய பொய்க்கு நீங்கள் செவி கொடுக்க விரும்பினால், அது உங்களைப் பொறுத்தது. ஆனால் நீங்கள் அப்படி செய்ய வேண்டிய அவசியமில்லை. இன்றிரவு நீங்கள் விடுதலையடைந்திருக்கிறீர்கள். அவர் உங்களை விடுதலையாக்கியிருக்கிறார். வார்த்தையிலுள்ள ஒன்று, அவருடைய கிருபையினால் நீங்கள் விடுதலையானீர்கள் என்று உங்களை உணரச் செய்ய முடியுமானால்; வார்த்தை அல்லது தேவனுடைய கிரியை, நீங்கள் உட்பட எல்லாருமே விடுதலையானார்கள் என்று உங்களை புரிந்து கொள்ளச் செய்ய முடியுமானால், அந்த அடிப்படையில் அதை நீங்கள் ஏற்றுக் கொள்ளும்போது, நீங்களும் விடுதலையாகி விடுகிறீர்கள். நீங்கள் வித்தியாசமான உணர்ச்சியைப் பெற்றிருக்க வேண்டிய அவசியமேயில்லை, உண்மையில் நீங்கள் எவ்வித உணர்ச்சியும் பெற்றிருக்க வேண்டிய அவசியமேயில்லை. அது உணர்ச்சியின் அடிப்படையில் அல்ல... இயேசு, ''உங்களுக்கு உணர்ச்சி உண்டானதா?'' என்று கேட்கவில்லை. அவர், ''நீங்கள் விசுவாசித்தீர்களா?'' என்று தான் கேட்டார். அது விசுவாசம்! நமது விசுவாசம், இருபுறமும் கருக்குள்ள தேவனுடைய பட்டயத்தைப் பிடித்திருக்கும் பலத்த கரம். அந்த இருபுறமும் கருக்குள்ள பட்டயத்தை விசுவாசம் என்னும் பலத்த கரம் பிடித்துக் கொண்டிருக்ககுமானால், அது எல்லா வாக்குத்தத்தங்களையும் வெட்டிக் கொண்டே செல்லும். சிலருக்கு தசை பலவீனம் இருக்கலாம். எனவே அவர்களால் வெட்ட முடியாது, அவர்கள் ஒரு ஸ்தாபனத்தை சேர்ந்து கொள்ளும் அளவுக்கு ஒரு சிறு கீறலை உண்டாக்குவார்கள். சிலர் நீதிமானாக்கப்படுதல் என்பதற்குள் மாத்திரம் வர முடிகின்றது. ஆனால் ஒரு பெரிய பலத்த கரம் இந்த வேதாகமத்தைப் பிடித்துக் கொண்டிருக்குமானால், அது ஒவ்வொரு வாக்குத்தத்தத்தையும் வெட்டிக் கொண்டே செல்லும். அது உண்மை. எனவே கர்த்தருக்குள் பலமுள்ளவர்களாயிருங்கள்! 10இப்பொழுது நான் எழுதி வைத்துள்ள குறிப்புகளுக்குப் பொருளாக இன்றிரவு வேதத்திலிருந்து ஒரு பாகத்தை வாசிக்க விரும்புகிறேன். அது நியாயாதிபதிகளின் புத்தகம் 16ம் அதிகாரம் 27, 28 வசனங்களில் காணப்படுகிறது. நான் கூற விரும்புவதற்கு ஒரு பொருளை இதிலிருந்து தெரிந்து கொள்கிறேன். ''அந்த வீடு புருஷராலும், ஸ்திரீகளாலும் நிறைந்திருந்தது; அங்கே பெலிஸ்தரின் சகல பிரபுக்களும், வீட்டின் மேல் புருஷரும் ஸ்திரீகளுமாக ஏறக்குறைய மூவாயிரம் பேர் சிம்சோன் வேடிக்கைகாட்டுகிறதைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது சிம்சோன் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு: கர்த்தராகிய ஆண்டவரே, நான் என் இரண்டு கண்களுக்காக ஒரே தீர்வையாய்ப் பெலிஸ்தர் கையில் பழிவாங்கும்படிக்கு, இந்த ஒரு விசை மாத்திரம் என்னை நினைத்தருளும், தேவனே, பலப்படுத்தும் என்று சொல்லி.'' நியா; 16: 27-28. 11கர்த்தர் தாமே தமது ஆசீர்வாதங்களை வார்த்தையுடன் கூட்டுவாராக. இதை நான் பொருள் என்று அழைப்பேனானால், அடுத்த சில நிமிடங்களுக்கு, “கர்த்தாவே, இந்த ஒரு விசை மாத்திரம்'' என்பதை தெரிந்துக்கொள்ள விரும்புகிறேன். இன்னும் ஒரு விசை மாத்திரம், கர்த்தாவே. இந்த இருவரும் அந்த பெரிய அரங்கத்தினுள் நுழைந்த போது ஏறக்குறைய மூவாயிரம் பெலிஸ்தர், அரங்கத்தின் உயரமான படிக்கட்டுகளில் உட்கார்ந்து கொண்டு கீழே நோக்கிக் கொண்டிருந்தனர் என்று வேத வசனம் உரைக்கிறது; மிகவும் கீர்த்தி வாய்ந்த இராணுவத் தலைவர்கள், அழகிய ஆபரணங்கள் அணிந்திருந்த அவர்களுடைய மனைவிகளுடன் அவ்விடத்தில் அமர்ந்திருந்தனர். அறிவிப்பாளர், ''சிம்சோன் தளத்திற்குள் நுழைகிறான்'' என்று அறிவித்தான். 12அவர்கள் எழுந்து நின்று, சற்று அருகில் வந்து, தங்கள் கழுத்தை நீட்டி, அவனை நன்றாகக் காண முயற்சி செய்திருப்பார்கள். அவர்கள் ஒரு காலத்தில் போர் வீரனாக தலை சிறந்து விளங்கிய மனிதனை அப்பொழுது ஒரு மாமிசப் பிண்டமாக, குருடனாக, ஒரு பிள்ளையாண்டான் கைலாகு கொடுத்து தளத்துக்கு கூட்டிக் கொண்டு வருவதைக் கண்டிருப்பார்கள். நாள் முழுவதும், அந்த அறைகள், குடித்து வெறித்த ஆண்கள் பெண்கள் இவர்களின் களியாட்டத்தினால் சுவற்றுக்கு சுவர் எதிரொலித்திருக்கும், அது எத்தகைய ஒரு காட்சியாக இருந்திருக்கும்! ஆனால் அவர்களுடைய முக்கிய விரோதியாகிய இந்த மனிதன் பார்வையற்றவனாய், ஒரு பிள்ளையாண்டான் அவனுக்கு கைலாகு கொடுத்து கூட்டிக் கொண்டு வந்து, அவன் தளத்தில் வந்த போது, எத்தகைய ஒரு அமைதி நிலவியிருக்கும்! ஒரு காலத்தில் தீரமான மனிதன்! ஒரு காலத்தில் புகழ் வாய்ந்த போர் வீரனாக இருந்த சிம்சோன், ஒரு சிறுவனால் வழி நடத்தப்பட்டு தளத்தை அடைகிறான். தேவனுடைய ஊழியக்காரனாயிருந்த மனிதன், குடியும், களியாட்டமும் உள்ள இடத்திற்கு அந்நிலையில் கொண்டு வரப்பட்டான். 13யேகோவாவின் மேல் வெற்றி கொண்ட அவர்களுடைய மீன்- தெய்வம் தாகோனுக்கு அது ஒரு பெரிய கொண்டாட்டமாக இருந்தது. இங்கு ஒரு நிமிடம் நிறுத்திக்கொள்வோம், யேகோ வாவின் மேல்பெற்ற வெற்றியைக் கொண்டாடுதல் என்பது உங்களுக்குள் ஊடுருவிச் செல்லட்டும். அஞ்ஞானிகளின் விக்கிரக மாகிய தாகோன், பெலிஸ்தரின் மீன் தெய்வம். தேவன் அதை வெறுத்தார். இங்கு அவர்கள் குடித்து வெறித்து, தேவனுடைய ஊழியக்காரனின் மேல் பெற்றவெற்றியைக் கொண்டாடிக் கொண்டிருந்தனர். அதை யோசித்து பார்த்தால், அது எவ்வளவு பயங்கரமான காரியம்! கூடுமானால் சில நிமிடங்கள் நின்று கொண்டு, அந்த படத்தை வர்ணம் தீட்ட எனக்கு பிரியம். அப்படிப் பட்ட ஒன்றை நீங்கள் நின்று கொண்டு பார்க்க நேர்ந்தால் எப்படியிருந்திருக்கும் என்பதை உங்கள் மனதில் கற்பனை செய்து பாருங்கள். பிறகு அந்த காட்சியை உங்களிடம் கொண்டுவரப் போகிறேன். 14சற்று கற்பனை செய்து பாருங்கள், நாள் முழுவதும் குடித்தல் கொண்டாட்டம், அழகாக உடுத்திய பெண்களும், ஆண்களும், பிரபுக்களும், போர் வீரர்களும், தேசத்தின் தலை சிறந்தவர்களும், அந்த புது கட்டிடத்தில் குழுமியருந்தனர். அங்கு அவர்கள் மனதெய்வத்துக்கு ஒரு புது விக்கிரகம் உண்டாக்கி நிறுத்தி, யேகோவாவின் ஊழியக்காரன் மீது கொண்ட வெற்றியின் நிமித்தம் அவனுக்கு மரியாதை துதியும் செலுத்தினர். அதை இன்னும் மோசமாக்க, தலைவனான மனிதன், அந்நாளின் செய்தியாளன், தன் கண்கள் பிடுங்கப்பட்டவனாய் ஒரு சிறுவன் அவனுக்குக் கைலாகு கொடுத்து, அவனை அரங்கத்திற்குள் கொண்டு வருகிறான். அந்த சிறுவன் தடுமாறும் குருடனை அந்த இடத்துக்குக் கொண்டு வந்தபோது, ஒரு பெரிய இயந்திரத்தைப் போல் அங்கு நின்று கொண்டிருந்த பருமனான அந்த மனிதன், முற்றிலும் உதவியற்ற நிலையில், மெல்லப் பேசுவதை என்னால் கேட்க முடிகிறது. தேவன் அவனை ஒரு நோக்கத் துக்காக எழுப்பினார். அவனோ தன் பிறப்புரிமையை விற்றுப்போட்டான். அங்கு அவன் பெரிய இயந்திரமாக, ஆனால் அதில் சிறிதும் பெலன் இல்லாமல், ஒரு சிறுவன் அவனுக்குக் கைலாகு கொடுத்து, அங்கு நின்று கொண்டிருந்தான். சிம்சோன் இதைக் குறித்தெல்லாம் சிந்தனை செய்திருப்பான் என்பதில் என் மனதில் எவ்வித சந்தேகமுமில்லை, அவன் தன் பலத்தை இழந்த போது, என்ன நடந்ததென்று யோசித்திருப்பான். அவனுடைய பொருத்தனை அவனை விட்டு எடுக்கப்பட்டது. அவன் தன் பகைஞரிடம் சரணடைந்தான். அவர்கள் அவனுடைய கண்களைப் பிடுங்கி அவனைக் குருடாக்கினார்கள். அவன் அந்த சிறுவனிடம், ''கட்டிடத்தைத் தாங்குகிற தூண்களிடத்தில் என்னை நடத்திச் செல், அந்த தூண்களிடத்தில் என்னை நடத்திச் செல்“ என்றான். 15அதை யோசித்துக் பாருங்கள்! அவர்கள் அவனை வெளியே கொண்டு வந்து, அவர்களுக்கு முன்பாக வேடிக்கை காட்டும்படி செய்தார்கள். அவன் குடித்து வெறித்திருந்த அந்த கூட்டத்தினரை மகிழ்வித்தான். அது எப்படிப்பட்ட நிந்தையாக இருந்தது! அது என்ன ஒரு அவமானம்! அது என்ன ஒரு உதாரணமாயுள்ளது! சிம்சோன் தூண்களின் அருகில் நின்று கொண்டு பகைஞருக்கு வேடிக்கை காட்டினது, நன்டைத்தை அழிவடைந்து, தோற்றுப் போன ஒரு தேசத்தை என் ஞாபகத்துக்கு கொண்டு வருகிறது. இழிவுபடுத்தப்பட்டு, மனம் உடைந்து, அவன் எப்படிப்பட்ட நிலையில் இருந்தான்! நன்னடத்தை கெட்டு, விழுந்து போன தேசத்துக்கும், தன் பிறப்புரிமையை விற்றுப்போட்டு நன்னடத்தை கெட்டு, பகைஞரிடம் சரணடைந்துள்ள விழுந்து போன ஒரு சபைக்கும் அவன் அடையாளமாகத் திகழ்கிறான். தேவனைச் சேவிக்க நீ எழுப்பப்பட்டாலும், நன்னடத்தை கெட்டு விழுந்து போதல் அந்நிலைக்கு உன்னைக் கொண்டு செல்கிறது என்பதற்கு அது பொதுவான உதாரணமாயுள்ளது; என்னே ஒரு உதாரணம்! 16அங்கு குழுமியிருந்த எல்லா போர் வீரர்களும், அழகான மணிகளையும், வளையல்களையும், ஆபரணங்களையும் அணிந்திருந்த பெண்களும், “இவன்தான் சிம்சோனா? நீங்கள் கூறின பராக்கிரம்சாலி இவனா? வல்லமையுள்ள தேவர்களின் ஆவி இவனுக்குள் வாசம் செய்தது என்று நீங்கள் கூறினது இவன்தானா? தேசத்தைக் கைப்பற்றக் கூடிய பலமுள்ளவன் என்று நீங்கள் கூறினது இவன் தானா? ஆனால் இப்பொழுது அவனைப் பாருங்கள்!'' என்று கூறுவது என் காதில் விழுகிறது. என்னே ஒரு உதாரணம்! அது நமக்கு எப்படிப்பட்ட ஒரு பாடமாக அமைந்திருக்க வேண்டும்! இது எவ்வளவு பயபக்தியான காரியமாக இருக்க வேண்டும்! கொண்டாட்டத்துக்காக ஒன்று கூடியுள்ளதாக நாம் இதை அணுகக்கூடாது. நமது நிலையென்ன, நமக்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதைக் காணவே நாம் ஒன்று கூடியுள்ளோம். 17“இவன் தான் சிம்சோனா?'' என்று அவனைக் குறித்து கேள்விப்பட்டவர்கள் கேட்பதை என்னால் கேட்க முடிகிறது. சிம்சோனும் அதைக் கேட்டிருப்பான் என்பதில் சந்தேகமில்லை. இன்றைய நமது பெந்தெகொஸ்தே அசைவைக் குறித்தும் இந்நேரத்தில் சத்துரு அதையே கூறமுடியும் அல்லவா என்று நான் வியக்கிறேன். [காலி இடம்.] சிம்சோன் என்னும் பெயரைக் கேட்டாலே அவர்கள் எல்லாரும் நடுங்கினர், ஏனெனில் அவன் அபிஷேகம் பண்ணப்பட்ட தேவனுடைய ஊழியக்காரனாயிருந்தான். அவன் நசரேய வரத்துடன் பிறந்தான். அவனுக்கு நசரேய வாரம் இருந்தவரைக்கும் எதுவுமே அதை தடுத்து நிறுத்த முடியாது என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். அவன் அந்நாளுக்கென தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட மனிதன், அந்நாளுக்கென தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட செய்தியாளன். இது என்னவாயிருக்கும் என்று அநேகர் எண்ணினர். உதவியற்ற நிலையில், குருடனாய், தன் கரங்களால் தூணைப் பிடித்துக் கொண்டிருந்து அவனைப் பார்த்த போது, அநேகர் அவனுடைய தீரமான செயல்களை நினைவு கூர்ந்தனர். அவர்கள் அவனைக் கேலி செய்து, வாரினால் அடித்து, “பராக்கிரமம் பொருந்திய சிம்சோனே, இங்கே வா! ஏதாவதொன்றைச் செய், பராக்கிரமசாலியே, உன் தேவன் எங்கே?'' என்று கேட்டனர். 18உங்களைத் தோற்கும் நிலைக்கு சத்துரு கொண்டு வரும் போது, அதைத்தான் அவன் செய்ய விரும்புகிறான். ஆனால் தேவனுடைய வல்லமை சபையின் மூலம் கிரியை செய்து கொண்டு வரும்வரைக்கும், அவனுக்கு அப்படி செய்ய தைரியமிராது. நசரேய ஆசீர்வாதங்கள் உங்கள்மேல் தங்கியிருக்கும் போது, அவன் அப்படி செய்ய பயப்படுவான். ஆனால் நீங்கள் வாரினால் அடிக்கப்படுவதை அவனால் காணமுடிந்தால், அப்பொழுதுதான் அவன் உங்களைக் கேலி செய்கிறான். அப்பொழுதுதான் அவன், அவர்களுக்கும் நமக்குமிடையே வித்தயாசம் ஏதுமில்லையென்றும், அவர்களும் நம்மைப் போன்றவர்களே என்று கூற முனைவான். ஆனால், யேகோவாவின் ஆசீர்வாதங்களைக் கொண்டு அது உயர்ந்து நின்று, ஏதோ வித்தியாசம் காணப்படும் போது, அவர்கள் ஏதாவதொன்றைக் கூற பயப்படுகின்றனர். தேவனுடைய வல்லமை கிரியை செய்வதை அவர்கள் காணும் வரைக்கும், தன் வாயை மூடிக்கொண்டிருக்க பிசாசு போதிய அறிவுபடைத்தவனாயிருக்கிறான். ஆனால், நீங்கள் தோற்கடிக்கப்பட்டீர்கள் என்று அவன் அறியும் போது, அவன் எல்லா பிசாசுகளையும் உங்கள் மேல் அவிழ்த்து விடுகிறான். 19அந்த நிலையில் தான் சிம்சோன் அங்கு நின்று கொண்டிருந்தான். அதை சற்று யோசித்து பார்ப்போம். போர் வீரர்கள், அவர்களில் சிலர் வெகுகாலம் போர் செய்தவர்கள், தங்கள் முகங்களில் வடுக்கள் கொண்டவர்களாய், சிம்சோன் நம்பிக்கையற்றவனாய், உதவியற்றவனாய் அங்கு நின்று கொண்டிருப்பதைக் கண்டதை என்னால் காண முடிகிறது, சிம்சோன் ஒரு சமயம் தன்கையில் ஒரு தாடை எலும்பை வைத்துக் கொண்டு, ஆயிரம் பெலிஸ்தரைக் கொன்று அவனுடைய பாதங்களின் கீழ் குவித்ததை அவர்கள் நினைவு கூர்ந்தனர், ஒரே ஒரு மனிதன் சூரியவெப்பத்தினால் உலர்ந்து கருகிப்போன ஒரு கழுதையின் தாடை எலும்பைக் கொண்டு அத்தனை பெலிஸ்தரைக் கொன்று போட்டான் என்னும் செயல் அவர்களுடைய ஆலோசனை சங்கத்துக்கு கொண்டுவரப்பட்ட போது, அது எப்படி முடியுமென்று அவர்கள் கேள்வி கேட்டனர். 20உங்களில் அநேகர் பெலிஸ்தரின் சரித்திரத்தைப் படித்திருக்கிறீர்கள், அவர்கள் அணிந்திருந்த போர்க்கவசம்; தலைச்சீரா ஒரு அங்குலம் கனமுள்ள பித்தளையினால் செய்யப்பட்டிருந்தது. ஒரு நீண்ட ஈட்டியோ, அல்லது இருபுறமும் கருக்குள்ள பட்டயமோ அவர்களைத் தாக்கினாலும், அவர்களுக்கு காயம் ஏற்பட்டு விழுந்து போகாதிருக்க, அவர்கள் அரை அங்குலம் கனம் கொண்ட பித்தளையினால் செய்யப்பட்ட மார்க்கவசத்தை அணிந்து தங்கள் உடல் முழுவதையும் மறைத்திருந்தனர். அவர்கள் தீரமுள்ள போர் வீரர்கள். எப்படி ஒரு மனிதன், தன்னைச் சுற்றிலும் ஆயிரம் வீரர்கள், இத்தகைய போர்க்கவசம் அணிந்து கையில் ஈட்டியைப் பிடித்துக் கொண்டு கண்கள் மாத்திரம் காணத்தக்கதாய் தலை முழுவதையும் மறைத்த பெரிய தலைச் சீராக்களை அணிந்தவர்களாய் இருந்த போது, ஒரு கழுதையின் தாடை எலும்பைக் கொண்டு ஒரே சமயத்தில் அந்த ஆயிரம் பேரையும் கொன்றிருக்க முடியும்? அந்த தலைச் சீராவின் மேல் அவன் அடித்த முதல் அடியே, உடையும் தன்மை கொண்ட அந்த தாடை எலும்பை சுக்குநூறாக்கியிருக்கும், அவன் போர்வீரனை அடித்தபோது, அது தலைச்சீராவில் துளையுண்டாக்கி அவனை உடனடியாக கொன்று போட்டதால், அவனிடம் ஏதோ இயற்கைக்கு மேம்பட்ட பலம் இருந்ததை அவர்கள் அறிந்து கொண்டனர். அவன் வலது கையினாலும், இடது கையினாலும் தாக்கிக் கொண்டே சென்றான். அவன் தாக்கின ஒவ்வொரு முறையும், தேவனுடைய வல்லமையும் அதனுடன் கூட தாக்கினது. 21அதற்கு, நாம் நினைப்பது போல், ஒரு பெரிய காரியம் அவசியமில்லை, சத்துருவை எந்த சூழ்நிலையிலும் மடங்கடிக்க, பரிசுத்த ஆவியினால் முற்றிலுமாக அபிஷேகம் பண்ணப்பட்டு, தேவனுடைய வல்லமை பெற்றுள்ள ஒரு கரம் மாத்திரமே அவசியம். அதையெல்லாம் எவ்வளவு நன்றாக இந்த போர்வீர்கள் நினைவு கூர்ந்தனர்! “ஒருக்கால் நாம் வேறெதாவது ஒரு மனிதனை பிடித்துக் கொண்டு வந்து விட்டோமா?'' என்று சிலர் எண்ணியிருக்கக் கூடும். ''இல்லை, அது அவன் தான். அவன் உருவம் எனக்கு ஞாபகமுள்ளதே, அது சிம்சோன் தான். அவன் உண்மையுள்ள, தேவனைச் சேவிப்பதாக கூறிக்கொண்டான். ஆனால், அவனுடைய தேவனோ அவனைக் கைவிட்டார்.'' ஆனால், அவர்கள் நினைத்தது தவறு! தேவன் அவனைக் கைவிடவில்லை, அவன் தான் தேவனைக் கைவிட்டான். இன்றிரவு ஜனங்களுடைய வழியும் அவ்வாறேயுள்ளதென்று எண்ணுகிறேன். தேவன் தமது சபையைக் கைவிடவில்லை. சபைதான் தேவனையும், அவருடைய வார்த்தையையும் புறக்கணித்துள்ளது. அதுதான் இன்றைய விவகாரம். 22கவனியுங்கள், அவர்களில் அநேகர் நினைவு கூர்ந்தனர். ஒரு புறம் நின்று கொண்டிருந்த கூட்டம், ''தெலீலாள் அவனை, குதிரைகளும் கூட இருக்க முடியாத கயிறுகளால் கட்டிபோட்டது எங்களுக்கு ஞாபகமுள்ளது. நாங்கள் அவன் மேல் விழுந்த போது, அவன் சாதாரண நூலைப்போல் அதை அறுத்துப் போட்டான். இப்பொழுதோ இங்கு அவன் தோல்வியடைந்தவனாய் நின்று கொண்டிருக்கிறான்'', என்றது. மற்றொரு கூட்டத்துக்கு, ஒரு இரவு காசா ஊரில் நடந்த சம்பவம் நினைவுக்கு வந்தது. அவர்கள் அவனை வளைத்து கொண்டு பட்டினத்து வாசல் கதவுகளை அடைத்து விட்டனர். அவர்கள், ''அவன்மேல் விழுந்து அவனைக் கொன்று போடுவோம்'' என்றனர். ஆனால், கர்த்தருடைய ஆவி அவன் மேல் இறங்கினது. அவன் பட்டினத்து வாசல் கதவுகளைப் பெயர்த்து அவைகளை மலையின் உச்சிக்கு சுமந்து கொண்டு சென்றான். ஒரு மனிதன் தேவனுக்காக தன் கடமையைச் செய்யும் போது, எந்த வாசலும், எதுவுமே அவன் வழியில் குறுக்கே நிற்க முடியாது. ஒரு நாள் பிசாசு, தேவனுடைய மனிதனையும், அவருடைய ஜனங்களையும் சிவந்த சமுத்திரத்தைக் கொண்டு வேலியடைக்க முயன்றான். ஆனால், அவர்களோ அதன் வழியாய் கடந்து சென்றனர். ஒரு மனிதன் தேவனுடைய சேவையில் இருந்து, ஆவியின் அபிஷேகமும், ஆசீர்வாதமும் அவன் மேல் தங்கியுள்ள வரைக்கும், அவன் எதற்கும் பயப்படக்கூடாது, ஏனெனில் அவர் நம்முடன் கூட இருப்பதாக நமக்கு வாக்களித்துள்ளார். எனவே, எதுவும் நம்மை எக்காரணத்தைக் கொண்டும் தொல்லைப்படுத்தாது. 23ஆனால் தேவனுடைய நீடிய பொறுமை முடிவில் உங்களை விட்டுவிலகும் போது என்ன நேரிடும் என்பதற்கு இதுவே உதாரணம். அவர் நீடிய பொறுமையுள்ளவர் என்பது உண்மையே. ஆனால் அவருடைய பொறுமைக்கும் ஒரு முடிவுண்டு என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். அவர்கள் சிம்சோனைப் பிடித்த அன்றிரவே அவன் தவறு செய்தான், முடிவில் தேவனுக்குப் போதுமென்றாகி விட்டது! அவர் அவனைத் திருத்த முடியவில்லை. ''தேவனே, தேவனுடைய பொறுமை அற்றுப்போகும் நிலைக்கு பெந்தெகொஸ்தே வர வேண்டாம்“ என்பதே என் ஜெபமாயுள்ளது. இந்த வாரம் நாங்கள் கற்பித்த விதமாக, தேவன் செய்தியாளர்களை அனுப்பிக் கொண்டேயிருப்பார். அவர் காலந்தோறும் தீர்க்கதரிசிகளை எழுப்பி, அவருடைய வார்த்தையை முன்னுரைத்து, அதை மீண்டும் அளித்துக் கொண்டே வந்துள்ளார். ஆனால் நீங்கள் தொடர்ந்து அதிலிருந்து விலகிச் செல்வீர்களானால், நீங்கள் குருடாக்கப்பட்டு, வல்லமையற்றவர்களாய், உதவியற்றவர்களாய், தோல்வியடைந்தவர்களாய், இருப்பதை அறிவீர்கள். அந்நிலையை தான் நாம் அடைந்து கொண்டிருக்கிறாம் என்று நான் ஐயமுறுகிறேன். பாருங்கள், சிம்சோன் பகட்டைக் கண்டு விழுந்து போனான். இன்றைய சபையும் பகட்டைக் கண்டு விழுந்து போகிறது. இப்படிபட்ட காரியங்கள் நடப்பது எவ்வளவு பரிதாபம்! 24ஆம், அவர்கள் தேவனுடைய வல்லமையை வேலியிட்டு வைக்க முயன்ற போது, அவர்களால் அதை செய்ய முடியவில்லை என்பதை அறிந்து கொண்டனர். சிம்சோன் பல டன்கள் எடையுள்ள அந்த இரும்புக் கதவுகளை பெயர்த்து, அவைகளை அங்கு கிடத்தினான். நிச்சயமாக யாரும் அவனைத் துரத்த முடியாது என்பதை அவர்கள் நன்கு அறிந்திருந்தனர். ஒரு மனிதன் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற்று, கர்த்தருடைய வார்த்தையையும், கர்த்தர் உரைக்கிறதாவது என்பதையும் கொண்டிருப்பானானால், அவனைத் தாக்காமலிருக்க நீங்கள் போதிய அறிவு படைத்திருக்க வேண்டும். ஏனெனில், ஜீவனுள்ள தேவனுடைய கரம் அங்குள்ளதென்றும், அது பலமுள்ளதென்றும் நீங்கள் அறிவீர்கள். 25அவன் பாதையில் சென்று கொண்டிருந்த போது, ஒரு சிங்கம் ஓடி வந்து கெர்ச்சித்ததைக் கண்டவேறொரு கூட்டம் அங்கிருந்ததாக நாம் காண்கிறோம். சிங்கம் ஒரு ஆபத்தான மிருகம், அது ஒரு வினாடிக்குள் நான்கு அல்லது ஐந்து பேர்களைக் கொல்ல முடியும். ஒரே ஒரு பாய்ச்சல் மாத்திரமே அதற்கவசியம். இந்த சிங்கம் கலக்கமுற்றிருந்து, அவர்கள் சிங்கத்தின் செயல்களைக் கவனித்தனர். சிங்கம் ஒருக்கால் கலக்கமும், கோபமும் கொண்டதாய், சிம்சோனின் மேல் பாய்ந்தது. அவன் அங்கு உதவியற்ற நிலையில் நின்றான், ஆனால், திடீரென்று! ஓ, அவர் ஆபத்துக் காலத்தில் அநுகூலமான துணை! திடீரென்று! இன்றிரவு வியாதியஸ்தர்களாகிய நீங்கள் அதை ஏன் சிந்தித்துப் பார்க்கக் கூடாது? யாராவது ஒருவர் உங்களுக்கு விரோதமாக, உங்களைக் குறித்து ஏதாவதொன்றைக் கூறுவார்கள் என்று பயப்படுகிறவர்கள். அதை ஏன் சிந்தித்துப் பார்க்கக் கூடாது? அவர்கள் இயேசுவைக் குறித்தும் கூட தீதானதைக் கூறினார்கள். திடீரென்று தேவனுடைய வல்லமை அவனை ஆட்கொண்டது! நீங்கள் ஒவ்வொருவரும் கூட, பாவ அறிக்கையின் மூலமாக வானத்திலும், பூமியிலும் உள்ள எல்லா வல்லமைக்கும் ஆளுகி, அது உங்கள் மேல் இறங்கும். 26சிம்சோன் அங்கு நின்று கொண்டிருந்த போது, தேவனுடைய வல்லமை அவன் மேல் இறங்கினது, சிங்கம் அவன் மேல் பாய்ந்த போது அவன் அதன் வாயைத் தன் கைகளால் பிடித்து அதை இரண்டாகப் பிளந்தான். அப்படிப்பட்ட செயலைச் செய்திருந்த அந்த மனிதன்... அதே மனிதன் தோல்வியுற்றவனாய், உதவியற்றவனாய், குருடனாய் இங்கு நின்று கொண்டிருக்கிறான். அதைப் போன்ற ஒரு சபையை நான் உங்களுக்குச் சுட்டிகாட்ட முடியும். வியாதியின் மேல் தேவன் அந்த சபைக்கு வல்லமையை வாக்களித்திருந்தார். ஆனால் அதுவோ வாக்குத்தத்தங்களையும் புறக்கணித்து வார்த்தையைப் புறக்கணித்து, உதவியற்றதாய், தோல்வியுற்றதாய், குருடாயுள்ளது. ''என்னுடைய நாமத்தினாலே அவர்கள் பிசாசுகளைத் துரத்துவார்கள்'' பிசாசை எதிர்த்து அவனைத் துரத்துதல். அவர் ஆசீர்வாதங்களை சபைக்கு வாக்களித்திருந்தார். ஆனால் சபையானது ஜெபக் கூட்டங்களிலிருந்தும், உத்தமத்திலிருந்தும் விலகி, கிறிஸ்தவ மார்க்கத்தை பாரம்பரியமாக்கி விட்டபடியால், அதன் பலம் அனைத்தும் அதை விட்டுப்போய் விட்டது. சபைகளுக்குள் பகட்டான காரியங்கள் நுழைந்துவிட்டன, அவள் தோல்வியுற்றவளாய் நின்று கொண்டிருக்கிறாள். ஓ, என்னே! 27அவன் வல்லமையனைத்தும், ஒரு ஸ்திரீயால் நீக்கப்பட்டவனாய் அங்கு நின்று கொண்டிருந்தான். ஏனெனில் அவனுடைய கண்கள் விரும்பிச் சென்றன. தேவனுடைய ஊழியக்காரனை மேற்க்கொள்ள வேண்டுமெனும் காரணத்தால், நடத்தை கெட்ட யேசபேல் ஒரு முறைமையை ஏற்படுத்தினாள். இதை நான் பயபக்தியுடன் கூற விரும்புகிறேன். யேசபேலின் முறைமை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அது மேற்க்கொண்டு, எல்லா ஸ்தாபனங்களையும், பெந்தெகொஸ்தேயினரையும் உலக சபைகளின் ஆலோசனை சங்கத்திற்குள் கொண்டு வந்துள்ளது. அது உங்களிடமுள்ளதை எடுத்துப்போட, பிசாசின் கண்ணியேயன்றி வேறல்ல. அந்த ஸ்திரீயால் உங்கள் வல்லமையெல்லாம் நீக்கப்பட்டு, அவள் உங்களைப் பார்த்து கேலியாகச் சிரிப்பாள். 28சில ஆண்டுகளுக்கு முன்பு - ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு - பெந்தெகொஸ்தே உயர்ந்து நின்றது. அதிலிருந்த ஜனங்கள் வித்தியாசமுள்ளவர்களாயிருந்தனர். அவர்கள் உலகப்பிரகாரமான வெவ்வேறு குழுக்களிலிருந்து, அவை உலகப்பிரகாரமாய் இருந்த காரணத்தால், பிரிந்து வந்தவர்கள். அது எடுத்துக்காட்டுக்கு உகந்த சபையாக விளங்கினது. தேவன் அந்த சபையைத் தெரிந்து கொண்டு, அது இன்று உலகிலுள்ள மிக வல்லமையுள்ள சபைகளில் ஒன்றாக விளங்குகிறது. ஆனால் அவள் செய்யும் காரியம் என்னவெனில், அவள் எதிலிருந்து வெளியே அழைக்கப்பட்டாளோ, அதே கதம்பத்துக்கு திரும்பச் சென்றுவிட்டாள். அவள் அவ்வாறு செய்யத் தொடங்கின போது, அவளுடைய வல்லமை அவளை விட்டு எடுபட்டது, முழு இரவு ஜெபக்கூட்டம் நடத்தப்படுவதை இன்று நாம் எங்கு காண்கிறோம்? போதகர், முன்பு செய்வது போல், காலை ஒன்று அல்லது இரண்டு மணி வரை பிரசங்கித்தால், அவர் காலி இருக்கைகளுக்கு மாத்திரமே பிரசங்கம் செய்ய நேரிடும். அவர்கள் வீடு சென்று, நான் சூசியை நேசிக்கிறேன் போன்ற தொலைகாட்சி நாடகங்களைக் காண வேண்டும். அதுதான் உண்மை! ஏன்? ''உங்கள் பொக்கிஷம் எங்கேயிருக்கிறதோ, அங்கே உங்கள் இருதயம் இருக்கும்''. நமது பொக்கிஷங்கள் வார்த்தையில் இருக்க வேண்டும். அரிசோனா மக்கள் கனிமப் பொருட்களை தேடுபவர்கள் (Prospectors). நீங்கள் சிறிது நேரம் தோண்டிப் பார்த்து, எது உங்களுக்கு என்று அறிந்து கொள்ள வேண்டும். அங்கு சிம்சோன் தோல்வியடைந்தவனாய், ஒரு ஸ்திரீயால் வல்லமை முழுவதும் நீக்கப்பட்டவனாய் நின்று கொண்டிருந்தான். அவன் தன்னை ஒரு ஸ்திரீக்கு அர்ப்பணித்து, தன் இரகசியத்தை அவளிடம் அறிவித்தபடியால், அவனுடைய வல்லமை அனைத்தும் அவனை விட்டு எடுக்கப்பட்டது. 29நாம் போதிய அளவுக்குப் பெரியவர்களாகி, நமது கஷ்டங்கள் நீங்கி, நாம் எங்கோ நடத்திக் கொண்டிருந்த சுவிசேஷ ஊழியத்தை விட்டு வெளி வந்தவுடனே, மற்றவர்களைக் காட்டிலும் பெரிய ஆலயங்களைக் கட்ட முயல்கிறோம். இவ்விஷயத்தில் நாம் மெதோடிஸ்டுகள், பிரஸ்பிடேரியன்கள், பாப்டிஸ்டுகள் இவர்களை மிஞ்சப் பார்க்கிறோம். அது உங்கள் நோக்கமல்ல. அதற்காக நீங்கள் இப்பொழுதுள்ள நிலையில் இல்லை. தேவனுக்கு ஏற்கனவே அவையிருந்தன. அதற்காக தேவன் உங்களை எழுப்பவில்லை. அவருடைய மகிமையை விளங்கப் பண்ணும் பொருட்டு, அவருடைய வல்லமையை உங்களுக்குள் வைத்து, நீங்கள் எடுத்துக்காட்டாக இருக்கவே அவர் உங்களை எழுப்பினார். ஆனால், சில 'ரிக்கி'கள் அதற்குள் நுழையட்டும், அவர்கள் எல்லாவற்றையும் மாற்றி அமைத்து, உலகத்தின் கவர்ச்சியான காரியங்களின் பின்னால் சென்று விடுவார்கள். சபையோர் அநேகர் அழகான சுருட்டை மயிர் கொண்ட ஒரு வாலிபனை தங்கள் போதகராகப் பெற பிரியப்படுகின்றனர். அவனுக்கு மற்றவர்களைக் காட்டிலும் அதிகம் தெரியும் என்று அவர்கள் கருதுகின்றனர். நீங்கள் வியாதிப்பட்டு, உங்களுக்கு இருதய அறுவை சிகிச்சை தேவைப்படும் போது, அப்பொழுது தான் மருத்துவப் பள்ளியை விட்டு வெளிவந்த மருத்துவரை நீங்கள் விரும்புவது கிடையாது. அப்பொழுது நீங்கள் தலை நரைத்த, அனுபவம் மிக்க வயோதிப மருத்துவரை நாடிச் செல்கிறீர்கள். இன்றிரவு சபைக்குத் தேவை என்னவெனில், தேவனுடைய வல்லமையென்று நிரூபிக்கப்பட்ட பழைய நாகரீகம் கொண்ட சுவிசேஷமேயன்றி, நமது வேத பள்ளிகள் குஞ்சு பொறித்துக் கொண்டிருக்கும் இந்த 'ரிக்கி'களில் சிலர் அல்ல. அது உங்களுக்குத் தெரியும், அந்நிலையில் தான் நாம் இன்றிரவு உள்ளோம். அவ்விதமான குழப்பத்துக்குள் செல்ல உங்களுக்கு எந்த வேலையும் கிடையாது. நீங்கள் அங்கேயே விழ ஆரம்பித்து விட்டீர்கள், நீங்கள் திரும்பி வரவில்லை. நீங்கள் அதில் சென்று கொண்டிருக்கும் வரைக்கும் நீங்கள் திரும்பி வரவே போவதில்லை. 30அந்த பெலிஸ்தர் சிம்சோனைக் குறித்து வியந்து கொண்டிருந்த நேரத்தில், சிம்சோனின் மனதில் என்னவெல்லாம் எழுந்தன என்று சிந்தித்துப் பார்த்தீர்களா? அவனுடைய மனதில் என்ன எழுந்திருக்கும் என்று நினைக்கிறீர்கள்? அவன் முழு குருடனாய், திரும்பவும் பார்வை பெற முடியாத நிலையில் அங்கிருந்த சமயத்தில், தேவன் அவனுக்களித்த மகத்தான வெற்றிகளைக் குறித்து யோசித்திருப்பான் என்று எண்ணுகிறேன். அவன் அங்கு, அந்த நாட்களைக் குறித்து எண்ணியிருப்பான். சிறிது நேரத்துக்கு முன்பு நான் இங்கு கூறினது போன்று, மனிதனுடைய வழி அவ்வாறேயுள்ளது. மனிதன் எப்பொழுதுமே தேவன் முன்பு செய்ததைக் குறித்து சிந்தனை செய்கிறான், அவர் வருங்காலத்தில் என்ன செய்யப் போகிறார் என்பதை எதிர் நோக்கியிருக்கிறான், ஆனால் தேவன் இப்பொழுது செய்து கொண்டு வருகிறதை அவன் அசட்டை செய்கிறான். பாருங்கள்! அவர் இப்பொழுது என்ன செய்து கொண்டிருக்கிறாரென்று பாருங்கள்! அவர் என்ன செய்தாரென்று நமக்குத் தெரியும். அவர் நமக்கு அனுப்பி, நம்மை அசைத்து, அவருடைய வார்த்தையின் பாதைக்கு நம்மை மறுபடியும் கொண்டு வர முயன்று, அதை உறுதிப்படுத்தப்பட்ட வார்த்தையினால் நிரூபித்துக் கொண்டு வருகிறார். நாமோ உட்கார்ந்து, உறங்கி, வீட்டுக்குச் சென்று, ''அவர் என்ன சொன்னார்? அவர் அவ்வளவு நேரமாக பிரசங்கம் செய்தது எனக்குப் பிடிக்கவில்லை'', என்கிறோம். 31அவனுடைய, ''சிறப்பான காலத்தில்'' கர்த்தருடைய ஆவி அவன் மேல் தங்கியிருந்தது, கர்த்தர் அவனுடைய ஜெபத்துக்கு உத்தரவு அருளின நாட்களில் நடந்தவையாவும் அவனுடைய மனதில் எழுந்தன. அவன் ஜெபிப்பதற்கு முன்பாகவே, அவன் தேவனுக்காக வாழ்ந்த வரைக்கும், தேவன் சரியான நேரத்தில் வந்தார். ''நான் ஜெபித்து, இந்த ஆயிரம் பெலிஸ்தரை மடங்கடிப்பேனா என்று அறிய வேண்டும்'' என்று யோசிக்கக்கூட அவனுக்கு நேரமில்லை. தேவன் அவனோடு கூட இருக்கிறார் என்பதை அவன் அறிந்திருந்தான், அவன் குற்றம் எதுவும் செய்யவில்லை. எனவே, அவன் கையில் கிடைத்த முதல் பொருளை அவன் எடுத்து, அவர்களை மடங்கடித்துக் கொண்டே சென்றான். அது உண்மை. அவன் படித்து பட்டம் பெறும் வரைக்குமோ, அல்லது சண்டை செய்வது எப்படியென்று கற்கும் வரைக்குமோ காக்கவில்லை. அவன் கையில் கிடைத்ததை எடுத்து, அதைக் கொண்டு அவர்களைத் தாக்கத் தொடங்கினான். 32ஆனால் இன்றைக்கோ எல்லா கோட்பாடுகளுடனும், அப்படிப்பட்டவைகளுடனும் எப்படி கோபங் கொண்டு சண்டையிடுவது என்று நாம் கற்றுக் கொண்டிருக்கிறோம். நாம் எங்கும் அடைவதில்லை. கோலியாத்தின் நாட்களில் இருந்தது போல், நாம் ஏமாற்றுக்காரர். ஒருக்கால் தேவன் நமக்கு, கோட்பாடுகளை அறியாத, ஆனால், பரீட்சிக்கப்பட்டு சோதிக்கப்பட்டு தேவனுடைய வல்லமையை மாத்திரம் அறிந்துள்ள ஒரு தாவீதை அனுப்புவார். திடகாத்திரமுள்ள ஒருவன், ''அற்புதங்களின் நாட்கள் கடந்து விட்டன'' என்று கூச்சலிட்டதன் விளைவாக முழு சபையுமே தோல்வியடைந்ததாய் அங்கு நின்று கொண்டிருந்தது, ஆனால் சிறிய உருவமும், தொங்கின தோள்களும், சிவந்த மேனியும் கொண்ட தேவனுடைய மனிதன் ஒருவன் அங்கு வந்தபோது, அது நடக்கவில்லை. தேவன் அவனோடே கூட இருந்தார். அவனுக்கு ஒரு அனுபவம் இருந்தது. அவர்கள், ''எங்கள் கோட்பாடுகளை எடுத்துக்கொண்டு, அவனை சந்திக்கப் புறப்படும்'' என்றனர். அவனோ, ''இதை நான் நிரூபித்தது கிடையாது, இதைக் குறித்து எனக்கு ஒன்றும் தெரியாது'', என்றான். பார்க்கப் போனால், சவுலின் மத சம்பந்தமான உடை தேவனுடைய மனிதனுக்குப் பொருந்தவில்லை. எனவே, அவன் அவைகளைக் களைந்து போட்டு, அவன் சரியென்று அறிந்திருந்ததை உடுத்துக் கொண்டான். இன்றைக்கு, சபையைக் கண்காணிக்க நமக்கு ஒரு இளங் கலையியல் (Bachelor of Art) பட்டம் பெற்றவரோ அல்லது, டாக்டர் பட்டங்கள் எதுவும் அவசியமில்லை. நமக்குத் தேவையான ஒன்றே ஒன்று, நமது வாழ்க்கையில், உயிர்த்தெழுந்த கிறிஸ்துவின் வல்லமையே. அதைக் கொண்டு, தேவனுடைய அன்பை நமது இருதயங்களில் பெற்றவர்களாய், தேவனுடைய வார்த்தையை நாம்கையாளும் போது, நாம் என்ன கேட்கிறோமோ, அதற்கு தேவன் உத்தரவு அருளுவார் என்னும் உறுதியை நாம் கொண்டவர்களாயிருப்போம். ''உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு அவர் நன்மையை வழங்காதிரார்.'' 33சிம்சோன் தனக்கிருந்த மகத்தான நாட்களை நினைவு கூர்ந்தான். சபையும் இன்றிரவு, ஏறக்குறைய பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு தெய்வீக சுகமளித்தலின் எழுப்புதல் ஒன்றுண்டாகி வெற்றி கொண்டதை நினைத்துப் பார்க்கிறது. அவனும் கூட... தேவனும், தவறிழைத்த அவருடைய ஜனங்களும். அது மிகவும் கவலைக்கிடமான ஒரு செயல், சிம்சோன் தேவனுக்கு தவறிழைத்ததை அங்கு நினைத்துப் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் தோல்வியடைந்தது தேவனுடைய தவறல்ல, அது அவனுடைய தவறே. சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க எழுப்பப்பட்ட தேவனுடைய ஜனங்கள்; அவன் நடத்தை கெட்ட இந்த ஸ்திரீயிடம் சல்லாபம் செய்த காரணத்தால், தேவன் அவனுக்களித்திருந்த பலம் அனைத்தையும் இழந்து போனான். சபையும் அதே நிலையில் உள்ளது! சபை ஒரு கலங்கரை விளக்கமாய் இருக்க வேண்டுமென்று கருதி தேவன் அதை எழுப்பி, அவருடைய வல்லமையை அதன் மூலம் பிரயோகித்து, வியாதியஸ்தர்களை சுகப்படுத்தவும், மரித்தோரை எழுப்பவும், பிசாசுகளைத் துரத்தவும், ஜனங்கள் பரிசுத்தமாக வாழ்ந்து முழு சுவிசேஷத்தைப் பிரசங்கித்து வல்லமையை வெளிப்படுத்த வேண்டுமெனும் சித்தம் கொண்டார். ஆனால் நாமோ ஊர்ந்து சென்று, தடைகளை கீழே இறக்கி, இவைகளைத் தடை செய்து விட்டோம். 34நாம் தவறான உதாரணத்தை எடுத்துக் கொண்டோம். ஸ்திரீகள் போதகரின் மனைவி நடப்பது போல் நடந்து கொள்கின்றனர். அவர் அவளைத் தன் விருப்பத்திற்கு விட்டுக்கொடுத்து, அவள் தலைமயிரைக் கத்தரிக்கவும், பாலுணர்ச்சியைத் தூண்டும் ஆடைகளை அணியவும் அனுமதித்தார், அவர் கடிந்து கொள்ளவேயில்லை. மற்ற ஸ்திரீகள் அவளைக் கண்டு, “சகோதரி இன்னார், அப்படி செய்யும் போது, நானும் செய்யலாம்'' என்கின்றனர். அதை உங்கள் உதாரணமாக்கிக் கொள்ளாதீர்கள். பாருங்கள்? நீங்கள் என்ன செய்ய வேண்டுமென்று தேவன் உங்களுக்குக் கட்டளையிட்டுள்ளார். அதில் நிலைத்திருங்கள். போதகராகிய நீங்கள் அப்படி செய்யும் போது, நீங்கள் தேவனுக்கும் அவருடைய ஜனங்களுக்கும் தவறிழைக்கிறீர்கள். நீங்கள் தேவனுடைய ஜனங்களுக்கு தவறிழைக்கும் போது, நீங்கள் தேவனுக்கு தவறிழைத்தவர்களாகின்றீர்கள். தேவன் உங்களை ஜாமக்காரனாக அங்கு வைத்திருக்கிறார். பாவம் உள்ளே நுழைவதை நீங்கள் காணும்போது, அதை தடுத்து நிறுத்துவதற்கு பதிலாக, அவர்கள் அதனால் வசீகரிக்கப்படுகின்றனர். ''எல்லா போதகர்களும் ஒன்று கூடும்போது, நாங்கள் ஒன்றைச் செய்யப் போகின்றோம். அதாவது நாங்கள் வோட்டு போட்டு, தெய்வீக சுகமளித்தல் என்னும் குறிப்பிட்ட உபதேசத்தை சபையிலிருந்து அகற்றப் போகின்றோம். அது எங்களுக்குப் பிடிக்கவில்லை'', என்கின்றீர்கள். பிறகு நீங்கள் அதற்கு விரோதமாக வோட்டு போடுகின்றீர்கள். ஓ, அப்படித்தான் அது நடந்தது. 35மெதோடிஸ்டுகளாகிய நீங்கள் முன்பு உங்கள் சபைகளில் தெய்வீக சுகமளித்தலைக் கொண்டிருந்தீர்கள். பிரஸ்பிடேரியன்களே, லூத்தரன்களே, நீண்ட காலம் முன்பு நீங்கள் அதைப் பெற்றிருந்தீர்கள். நீங்கள் கூச்சலிட்டு மகிழ்ச்சி கொள்வது வழக்கம். அதற்கு என்ன நேர்ந்தது? நீங்கள் ஆயிரத்து எண்ணூறு ரிக்கிகளைக் கொண்டிருக்கிறீர்கள். அவர்கள் அதை பகட்டுக்கு கொண்டு சென்று விட்டனர். அதன் விளைவாக தெய்வீக சுகமளித்தல் என்பது உங்களை விட்டு போய்விட்டது. பெந்தெகொஸ்தேயினராகிய நீங்களும் அதையே செய்துள்ளீர்கள்! அது உண்மை! இப்பொழுது நீங்கள் ஸ்தாபனங்கள் உண்டாக்கிக் கொண்டு, அவர்களைப் போலவே தோல்வியடைந்தவர்களாய் நின்று கொண்டிருக்கிறீர்கள். “எங்கள் குழு இதை விசுவாசிக்கின்றது. நீங்கள் எங்களைச் சேராவிட்டால் நரகத்துக்கு செல்வீர்கள்'' என்கின்றீர்கள். நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள், தர்க்கம் செய்து கொண்டிருக்கிறீர்களா? அதனால் உங்களுக்கு எந்த உபயோகமும் இல்லை. தேவன் உங்களுக்கு ஒரு ஆதரவையும் காட்டுவதில்லை, ஏனெனில் நீங்கள் மற்றவர்களைப் போலவே தோல்வியடைந்த நிலையில் இருக்கிறீர்கள். அவர்கள் சென்ற பாதையிலே நீங்களும் சென்றீர்கள். நிச்சயமாக! 36அவன் அழிப்பதற்காக எழுப்பப்பட்ட அதே தேசம் அவனைச் சிறைப்படுத்தியது, இதோ அந்த திடகாத்திரமுள்ள மனிதன், எந்த தேசத்தை அழிக்க வேண்டுமென்று அவன் தேவனால் எழுப்பப்பட்டானோ, அதே தேசத்தால் சிறை பிடிக்கப்பட்டு அங்கு நின்று கொண்டிருக்கிறான். உங்களைப் புண்படுத்த நான் விரும்பவில்லை, ஆனால் இது உங்களுக்கு உதவி செய்யுமென நம்புகிறேன். இதோ தேவனால் எழுப்பப்பட்ட பெந்தெகொஸ்தே சபை ஸ்தாபனத்திலிருந்து வெளியே வந்தது. ஆனால், இப்பொழுது அது அவர்களை எங்கே கொண்டு சென்றுள்ளது? இப்பொழுது அதே வர்க்கத்துக்கு நீங்கள் சிறைவாசிகளாகி விட்டீர்கள். அது உண்மையென்று உங்களுக்குத் தெரியும்! பிறகு யாராகிலும் ஒருவர் அதற்கு விரோதமாக ஒன்றைக் கூறிவிட்டால், அவர்களை வெளியே எறிந்து விடுகிறீர்கள். அது ஏறக்குறைய “குருடர் குருடருக்கு வழிகாட்டுவதாய்” உள்ளது. 37ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு பெந்தெகொஸ்தே சபையானது ஸ்தாபனம் உண்டாக்கிக் கொண்டே எதையுமே கடிந்து கொண்டதென்று எவருமே அறிவர். நீங்கள் சகோதரரும், சகோதரியுமாய் அந்த காலத்தில் வாழ்ந்தீர்கள். நீங்கள் நவீன சபையையும் அதன் நாகரீகத்தைக் குறித்தும், பெண்கள் நடந்து கொண்ட விதத்தையும், அவர்கள் கைக்கொண்ட நாகரீகத்தைக் குறித்தும், மனிதர் தேவனுடைய வார்த்தையை விட்டு விலகிச் சென்றதைக் குறித்தும் பேசினீர்கள். தேவன் உங்களை அதனின்று வெளியே அழைத்தார். ஆனால், நீங்களோ தேவன் உங்களை எதிலிருந்து வெளியே அழைத்தாரோ, அதற்கே நேராக திரும்பச் சென்று விட்டீர்கள். நீங்கள் அப்படியிருக்க வேண்டுமென்று தேவன் உங்களை எழுப்பின் போதிலும், நீங்கள் ஏதோ ஒரு ஸ்தாபனத்தின் தூணில் கட்டப்பட்டு, சிம்சோனைப் போல் தோல்வியுள்ள நிலையில், வார்த்தையைக் காணக்கூடாதவாறு உங்கள் கண்கள் பிடுங்கப்பட்டு, நின்று கொண்டிருக்கிறீர்கள். அது உண்மை. அது மிகவும் மோசமான செயல். அதை தோற்கடிக்க தேவன் உங்களை எழுப்பினார், நீங்களோ அதனுடன் சேர்ந்து கொண்டீர்கள். 38சிம்சோன், தேவன் அவனை எதிலிருந்து வெளியே இழுத்தாரோ, அங்கேயே சென்று ஒரு பெண்ணை மணந்து கொண்டான். பெந்தெகொஸ்தே சபையும், தேவன் அதை வெளியே இழுத்து அதற்கே திரும்பச் சென்று மணந்து கொண்டது. தேவன் குழுக்களுடன் ஈடுபட முடியாது. அவர் தனிப்பட்ட நபர்களுடன் மாத்திரமே ஈடுபடுகிறார், அது எக்காலத்தும் அவர் கொள்கையாய் அமைந்து வந்துள்ளது. இருவருக்கு இரு வெவ்வேறு கருத்துக்கள் இருக்க வகையுண்டு. தேவன் ஒரு மனிதனைத் தெரிந்து கொண்டு அவனை அவருடைய கருத்துக்குள் கொண்டு வருகிறார். அவ்வளவுதான். அவருக்குத் தேவையெல்லாம் ஒரு மனிதனே! இன்றைக்கும் அவர் அதையே முயன்று கொண்டிருக்கிறார். உன்னை அவர் தமது கரங்களில் கொள்ள முயன்று கொண்டிருக்கிறார். அவர் இங்கு ஒருவர், அங்கு ஒருவர் என்று தெரிந்து கொள்வார். அதுஒரு குழுவாக இராது. எனவே, அப்படிப்பட்ட எண்ணத்தை உங்கள் மனதை விட்டு எடுத்துப் போடுங்கள். 39நீங்கள் ஸ்தாபனம் உண்டாக்கிக்கொள்ளும் போது, அங்கேயே உங்கள் பிறப்புரிமையை இழந்துவிடுகிறீர்கள், நான் எந்த ஒரு மனிதனையும் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். தேவனுடைய செய்தியுடன் ஒரு மனிதன் எழுப்பப்படுகிறான். அவன் இவ்வுலகை விட்டு சென்றவுடனே அவர்கள் ஸ்தாபனம் உண்டாக்கிக் கொண்டனர், அவர்கள் ஸ்தாபனம் உண்டாக்கிக் கொண்ட மாத்திரத்தில் மரித்து போய் திரும்பி வரவேயில்லை. அப்படி திரும்பி வந்ததை யாராகிலும் கண்டதுண்டா? ஸ்தாபனம் உண்டாக்கிக் கொண்டவர்கள் திரும்பி வந்தவர்கள் என்பதை ஆதரிக்க ஒரு வேத வாக்கியமோ சரித்திரமோ எதுவும் கிடையாது. அவ்வாறு ஸ்தாபனம் உண்டாகிக் கொண்டவர்கள் தங்கள் ஆவிக்குரிய வல்லமையை இழந்து, திரும்பி வந்ததேயில்லை. ஜீவனுள்ள தேவன் சிறிதளவும் கூட அவர்களில் காணப்படும்வதில்லை. அவர்களுடைய ஆவிக்குரிய தட்பவெப்ப நிலை அளந்து காட்டு கருவியானது எப்பொழுதும் பூஜ்யத்துக்கு கீழே நாற்பது டிகிரியில் உள்ளது. அப்படித்தான் அது உள்ளது. ''தேவ பக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள், இப்படிப்பட்டவர்களை நீ விட்டு விலகு.'' 40அந்நாட்களில் தேவன், அதை அஸ்திபாரத்திலேயே தகர்த்தெறியக் கூடிய ஒரு மனிதனை தெரிந்து கொண்டு, அவன் மூலம் ஒரு சிறு குழுவை, எஞ்சியுள்ள சபையை, வெற்றிக்குக் கொண்டு சென்றார். அவர் அதை மறுபடியும் செய்வார். அவர் மாறுவ தில்லை, அவர் தேவன். தேவன் ஒன்றை ஒருமுறை கூறினால், அதை விட சிறந்த கருத்து அவருக்குத் தோன்ற முடியாது. அதை ஞாபகம் கொள்ளுங்கள். அதுவே நமது தைரியமாயுள்ளது. மனிதன் தேவனை வழிபட அவர் அவனுக்கு ஒரு வழியை ஏதேன் தோட்டத்தில், சிந்தப்பட்ட இரத்தத்தின் கீழ் உண்டாக்கினார். அவர் அதை மாற்றவேயில்லை. அவர் அதை மாற்றவும் முடியாது. அவர் அப்படி செய்வாரானால், அவருக்கு முதலாம் முறை இருந்ததைக் காட்டிலும் சிறந்த கருத்து தோன்றினதாக ஆகிவிடும். எனவே, அவரால் அப்படி செய்ய முடியாது. அவர் எப்பொழுதும் ஒரேவிதமாகவே இருக்கிறார். ஒரு தேசம் தம்மை விட்டு விலகிச் செல்லும்போது, தேவன் எப்பொழுதுமே ஒரு மனிதனை எழுப்பி, அவனை அங்கு நிறுத்தி, அவனுக்கு தேவனுடைய வார்த்தையை அனுப்பி, முழுவதையுமே கண்டனம் செய்தார். அவர் இவ்வாறு ஒரு மனிதனைத் தெரிந்து கொண்டு தம் பணியை நிறைவேற்றினார், அவர் ஒரு ஸ்தாபனத்தைத் தெரிந்து கொண்டு அவ்வாறு செய்யமாட்டார். நீ மாத்திரம் அவருக்குச் செவி கொடுத்து உன்னை அர்ப்பணித்தால், அவர் உன்னைத் தெரிந்து கொள்வார். 41ஆம், அவன் எந்த நோக்கத்துக்காக இவ்வுலகில் பிறந்து அதற்கான அதிகாரத்தைப் பெற்றானோ, அதன் சிறை வாசியாக அவன் அங்கு நின்று கொண்டிருந்தான். அவர்கள் பொழுது போக்குக்காக அவனை வேடிக்கை காட்டும்படி செய்தனர் - அவர்களை மகிழ்விக்க வேடிக்கை காட்டுதல். ஓ, என்னே! ஒரு ஸ்திரீ அவனைக் கவர்ந்து, அவன் தேவனுடைய வாத்தையிலிருந்து விலகும்படி செய்ய அவளை அனுமதித்தான். தேவனுடைய வார்த்தை அவனுக்கு ஒரு இரகசியமாக அளிக்கப்பட்டிருந்தது. அது ஒரு நசரேய வரம். அதை அவன் யாரிடமும் கூறக்கூடாது. ஆனால் அவனோ ஒரு ஸ்திரீயின் கவர்ச்சிக்கு ஆளானான். அதுதான் இன்றைக்கு நமக்கு நேர்ந்துள்ளது. கிறிஸ்தவ மார்க்கத்துக்கு இணங்காத காரியங்களை நமது சபையில் நாம் ஏற்றுக்கொண்டு விட்டோம். அவர்களுடைய சபையில் மாயாமாலக்காரர் இல்லையென்று யாருமே கூறமுடியாது. முழு அமைப்பே எல்லாவிதமான மாய்மாலக்காரரால் நிறைந்துள்ளது. அது உண்மை. ஆனால் உங்களுக்கு இந்த உறுதியை அளிக்க விரும்புகிறேன்... அது ஒரு விடுதியில் மாத்திரமே. நீங்கள் மெதோடிஸ்டு விடுதியைச் சேர்ந்திருக்கலாம், அல்லது பிரஸ்பிடேரியன் விடுதியைச் சேர்ந்திருக்கலாம். ஆனால் நீங்கள்... 42நீங்கள் ஒரு சபையைச் சேர முடியாது. நீங்கள் ஒரு விடுதியைச் சேரலாம், ஆனால் ஒரு சபையைச் சேர முடியாது. நீங்கள் அதில் பிறக்கின்றீர்கள். நீங்கள் ஒரு சபைக்குள் பிறக்கும் போது, அதில் ஒரு மாய்மாலக்காரனும் இருக்க முடியாது. அங்குள்ள அனைத்துமே பரிசுத்தமுள்ளதாயுள்ளது. ஏனெனில் நீங்கள் மரித்தீர்கள். உங்கள் ஜீவன் கிறிஸ்துவின் மூலமாய் தேவனுக்குள் மறைந்திருந்து, பரிசுத்த ஆவியினால் முத்தரிக்கப்பட்டுள்ளது. உங்களைப் பிடிக்க வேண்டுமென்று விரும்பினாலும் அவனால் முடியாது. ஏனெனில் நீங்கள் சென்ற பாதையிலேயே அவனும் வரவேண்டும். அப்பொழுது அவன் உங்கள் சகோதரனாகிவிடுவான். பாருங்கள்? எனவே, அவனால் அப்படி செய்ய முடியாது. நீங்கள் அங்கத்தினர்களின் எண்ணிக்கையை அதிகமாக்குவதற்கு அல்லது தீர்மானம் செய்வதற்கு ஒரு சபையைச் சேர்ந்து கொள்ளலாம். நான் நேற்று இரவு கூறினது போல, இன்றைக்கு நாம் கேட்பதெல்லாம், “அதிக அங்கத்தினர்கள், அதிக அங்கத்தினர்கள்'' என்பதே. அதுவே, இன்றைய ஆரவாரமாக உள்ளது. ''நாங்கள் அவர்களை தோற்கடித்து விட்டோம்,'' என்பதைக் காண்பிக்க வரைபடங்கள். யாரோ ஒருவரை ஞாயிறு பள்ளிக்கு ஒருவர் கூட்டிக் கொண்டு வந்தார் என்பதற்காக அவருக்கு வெகுமதி அளித்தல். அங்கு சென்ற பிறகு நீங்கள் என்ன செய்தீர்கள்? நீங்கள் என்ன கேட்கிறீர்கள்? வர்ணம் தீட்டியுள்ள யேசபேல் ஒருத்தி, அதற்கு முந்தின இரவு தன் பையன் நண்பனுடன் வெளியே சென்றுவிட்டு வந்ததைக் குறித்து பேசுகிறாள், அல்லது ஏதாவது அச்சிட்ட பிரதிகள் சுவற்றில் தொங்கிக் கொண்டிருக்கின்றன. அது உண்மையென்று உங்களுக்குத் தெரியும். பெந்தெகொஸ்தேயினரும் மெல்ல அதற்குள் சரிந்து கொண்டிருக்கின்றனர். வேறெங்கோ அந்த பிரதிகள் தயாராகின்றன, அதை நீங்கள் கற்பிக்கின்றீர்கள். சபையிலேயே மிகவும் உயர்ந்தவர் ஒரு மூப்பர். பேராயர் அல்ல, அல்லது வேறு யாரோ ஒரு போதகர் அல்ல. தேவன் அந்த சபையின் மூப்பருடன் தொடர்பு கொள்கிறார். அவர் தமது சபைக்கு தமது செய்தியையளிக்கிறார். அவர்களுக்கு என்ன தேவையோ அதை. 43ஆம், ஒரு ஸ்திரீ அவனைத் கவர்ந்து, அவன் தேவனுடைய வார்த்தையிலிருந்து விலகும்படி செய்ய அவன் அனுமதித்தான். இன்றைக்கு அவர்கள் அதையே செய்துள்ளனர். அவர்கள் எப்படி அதை செய்தனர்? ''நல்லது, சகோதரன் இன்னார் இன்னாரே, பாருங்கள். அதை உங்களிடம் கூற விரும்புகிறேன். அங்குள்ள ஜனங்களை உங்களுக்குத் தெரியுமல்லவா? அவர்கள் இதை செய்கின்றனர், அவர்கள் இந்த காட்சியை தொலைகாட்சியில் காண்கின்றனர். அவர்கள் உங்களுக்கு மாதிரி அல்ல. கிறிஸ்துவே உங்களுக்கு மாதிரி, அவர், ''நான் உங்களுக்கு மாதிரியை கொடுத்திருக்கிறேன்'' என்றார். அவரே உங்களுக்கு மாதிரியாக இருக்கட்டும். சபைகளுக்கும், அவ்வாறே இருக்க வேண்டும். ஆனால் அவர்களோ வெளிப்படுத்தல்; 17ல் கூறப்பட்டுள்ள வேசிகளுக்குத் தாயாகிய யேசபேல் அதையே செய்யும்படி விட்டுக்கொடுத்து, சபையை பழைய அமைப்புக்கு மறுபடியும் கொண்டு சென்று, இப்பொழுது நடந்து கொண்டிருக்கிற ஆவிக்குரிய காரியங்களை காணக்கூடாதவாறு குருடாக்கிவிட்டனர். ஓ, நீங்கள் அப்படி செய்ததாக நினைக்கவில்லையா, நீங்கள் நிச்சயம் அப்படி செய்துவிட்டீர்கள். என்னிடம் கூறாதீர்கள். பாருங்கள்? நான் கடந்த பதினைந்து ஆண்டுகளாக தேசம் முழுவதும் இங்கும் அங்கும் சுற்றி கொண்டிருக்கிறேன். குருடாக்கப்பட்டிருக்கிறீர்கள்! ஆவிக்குரிய காரியத்தைக் காணாதவாறு. பாருங்கள், இந்த கடைசி நாட்களில் தேவன் வந்து, அவர் என்ன செய்வதாகக் கூறினாரோ அதையே செய்து கொண்டிருக்கும் போது, நீங்கள், ''நல்லது, நான் உங்களிடம் கூற விரும்புகிறேன், அது ஒருக்கால் சரியாயிருக்கலாம். ஆனால், அந்த ஊழியமோ தேவனால் உண்டானதல்ல, என்கிறீர்கள். தேவன் எப்படி ஒரே ஊற்றிலிருந்து கசப்பான தண்ணீரையும், இனிப்பான தண்ணீரையும் தோன்றச் செய்ய முடியும்? அது அங்கு இருக்க முடியாது. 44ஆம், ஆவிக்குரிய காரியங்களுக்கும், தேவனுடைய வார்த்தைக்கும், குருடாக்கப்பட்டவர்களாய், எந்த குழியிலிருந்து வெளியே இழுக்கப்பட்டனரோ, அதே குழிக்கு திரும்பச் சென்றுவிட்டனர். பெந்தெகொஸ்தே ஒரு ஸ்தாபனத்தில் பிறந்து, வெளியே வந்தது. ஆனால், மனிதர்களோ அதை திரும்பவும் ஸ்தாபனத்திற்குள் கொண்டு சென்றுவிட்டனர். பெந்தெகொஸ்தே என்பது ஒரு அனுபவம், அதை ஸ்தாபனம் தாங்கிக்கொள்ள இயலாது. ஏனெனில், அது தனிப்பட்ட நபருக்கு ஏற்படும் அனுபவம். அது உண்மை. அந்த முழு குழுவே தோல்வியடைந்தவர்களாய் அங்கு நின்று கொண்டிருப்பதை பாருங்கள். போதகர்களுக்கு வேதபள்ளி அனுபவம் இல்லாமல் போனால், அவர்களை அவர்கள் அமர்த்த மாட்டார்கள். நமது மத்தியிலுள்ள ஒரு பெரிய பெந்தெகொஸ்தே ஸ்தாபனம் அன்றொரு நாள், நீங்கள் மிஷனரிமார்களுக்கு மிஷனரிகளாக இருப்பதற்கு போதிய அறிவுத்திறன் (I.Q). உள்ளதா என்று அறிந்துக்கொள்ள அவர்களை ஒரு மனோதத்துவ நிபுணரிடம் கூட்டிச் சென்றது - நமது மத்தியிலுள்ள பெரிய ஸ்தாபனங்களில் ஒன்று, அவர்களுக்கு உயர்ந்த அறிவுத்திறன் உள்ளதா என்று அறிந்து கொள்ள. தேவன் அப்படிப்பட்ட எதையும் செய்யவில்லை. அவர், ''நீங்களோ உன்னதத்திலிருந்து வரும் பெலனால் தரிப்பிக்கப்படும் வரைக்கும் அங்கேயே இருங்கள்,'' என்றார். அப்பொழுது நீங்கள் உங்கள் அறிவுத்திறனைப் பெற்று கொள்கிறீர்கள். உன்னதத்திலிருந்து வரும் பெலன் அதை உங்களுக்கு அளிக்கிறது. இயேசு அவர்களைப் பரிசோதிக்கச் சொன்ன நியமித்தின்படி அவர்கள் பரிசோதிப்பது கிடையாது. அவர்கள் தங்கள் சொந்த அறிவினால் விளைந்த கருத்துக்களை ஆதாரமாகக் கொண்டு, ஒரு மிஷனரியின் அறிவுத்திறனை பரிசோதித்துப் பார்க்கின்றனர். தேவன், ''அவர்களுக்கு அறிவுதிறனைப் புகட்டுங்கள்'' என்று கூறவில்லை. அவர், ''நீங்கள் உன்னத்திலிருந்து வல்லமையைப் பெற்றுக் கொள்வீர்கள்“ என்று மாத்திரமே கூறினார். ஆனால், நாமோ அதனின்று விலகிச் சென்று கொண்டிருக்கிறோம். 45ரோமன்கத்தோலிக்க சபை முதலில் பெந்தெகொஸ்தே சபையாக இருந்தது என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். அது முற்றிலும் உண்மை, கி.பி. 33ம் ஆண்டு, ஆனால், ரிக்கிகள் களைகளைப் போல் அங்கு உள்ளே நுழைந்ததன் காரணமாக, மேன்மையானவர்கள் - முதலாவதாக நிசாயா ஆலோசனை சங்கத்தில் என்ன நடந்தது தெரியுமா? அவர்கள் இந்த திட்டத்தை அமுல்படுத்தி, ஸ்தாபனம் உண்டாகிக் கொண்டனர். அது மரித்தது. உண்மையான தீர்க்கதரிசி அவனுடைய காலம் வரைக்கும் வாழ்ந்தான். ஏறக்குறைய ஆயிரம் வருடங்களாக அது இருளின் காலங்களைக் கடந்து வந்தது. அதைத்தான் தேவன் காண்பித்தார், தொடக்கத்திலேயே அவர் முழு முறைமையின் மேலும் தமது கண்டனத்தை தெரிவித்தார். அது உண்மை. போதகர்கள் ஒரு சபைக்கு போதகராவதற்கு முன்பு, வேதாகமப் பள்ளிகளுக்குச் சென்று, ''நான் பி.எச்.டி, எல்.எல்.டி. பட்டம் பெற்றுவிட்டேன்'' என்கின்றனர். ஐக்கியச் சீட்டைக் காண்பிக்கின்றனர். அர்த்தமற்றது! 46கர்த்தருடைய தீர்க்கதரிசி வனாந்தரத்திலிருந்து புறப்பட்டு வந்தான். அவன் எங்கிருந்து வந்தான், எங்கு சென்றான் என்று யாருக்குமே தெரியாது. ஆனால் அவன், ''கர்த்தர் உரைக்கிறதாவது'' என்பதைக் கொண்டிருந்தான். தேவன் அதை நிரூபித்தார். அவன் எந்த ஸ்தாபனத்திலும் சேர்ந்திருக்கவில்லை. அதுவே, தேவனுடைய முறைமையாக இருந்தது. அது உண்மை. வேதாகமப்பள்ளிகளிலிருந்து வெளிவந்த போதகர்கள் என்ன செய்தனர்? உலகப்பிரகாரமாக உடை உடுத்தி, குட்டை கால் சட்டை அணிந்து, தலைமயிரைக் கத்தரித்திருந்த பெண்களின் போக்கைக் கடிந்துக்கொள்ள அவர்களுக்குப் போதிய ஆவி கிடையாது. தன் மனைவியை அவ்வாறு செய்ய அனுமதிக்கும் எந்த மனிதனுக்கும், ஒரு நல்ல சுவிசேஷ சவுக்கடி அவசியம். அது உண்மை. அவள் தன்னை கனவீனமுள்ளவளாக நிரூபிக்கிறாள், அதற்கு நீசம்மதிக்கிறாய். தங்கள் சருமம் வெளியில் தோன்றும் வண்ணம் அவ்வளவு இறுக்கமான கால்சட்டைகளை அணிந்துள்ள மனைவியை தெருவில் கூட்டிச் செல்லும் மனிதன் எவனுமே, மானிடவர்க்கத்துக்கு முற்றிலும் அவமானத்தை விளைவிக்கிறவனாயிருக்கிறான். என்னைப் பொறுத்தவரையில், ஏதோ ஒன்று உள்ளே இல்லையென்று அது காண்பிக்கிறது. உள்ளே காலியாயுள்ளது என்பதை அது காண்பிக்கிறது. 47நீங்கள் அழகாக காணப்பட விரும்பினால், சிறிது அப்; 2:38ஐயும், சிறிது யாக்கோபு; 5:14ஐயும், சிறிது யோவான்; 3:16ஐயும், எடுத்து ஒன்றாக கலந்தால், அது சிறந்த அழகு சாதனமாக உங்களுக்கு ஆகிவிடும். உதடு வர்ணம் போன்ற அழகு சாதனங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் கோடிக்கணக்கான டாலர்கள் செலவிடப்படுவதைக் காண்கிறேன்; ஆனால், மிஷனரிமார்களோ சுவிசேஷ ஊழியம் செய்து பட்டினிகிடக்கின்றனர். இருப்பினும், “நாங்கள் தான் சபை” என்று பெருமையடித்துக் கொள்கிறீர்கள். அது என்னை வெட்கப்படச் செய்கின்றது! நாம் எல்லாவிதமான பகட்டான, பெரிய காரியங்களுக்குள் பிரவேசித்து விட்டோம். நீங்கள் செய்வது என்ன? நீங்கள் யேசபேலின் ஆவியை பெற்றிருக்கிறீர்கள் என்பதை அது காண்பிக்கிறது, காலியான இடம்! 48அன்றொரு நாள் ஒரு போதகர் பேசுவதைக் கேட்டேன். அவர் அருமையானவர். மனிதன் என்னும் முறையில் அவரை எனக்குப் பிடிக்கும். அவர் ஒரு குறிப்பிட்ட ஸ்பானத்தைச் சேர்ந்தவர். அவர் நதிக்கு மறுபுறம் வசிக்கிறார். அவர் வானொலி நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார். அவர் இப்பொழுது தான் திரும்பி வந்தார். அவர் பெண்கள் முகத்தில் நீல வர்ணம் போன்றவைகளைத் தடவிக் கொள்ளுதலைப் பற்றி பேசினார். நான் முதன் முறையாக அப்படிப்பட்ட ஒன்றைக் கண்ட போது, அது எனக்கு நடுக்கத்தை விளைவித்தது. நான் லாஸ் ஏஞ்சலிஸில் அப்பொழுது இருந்தேன். நான் கிறிஸ்தவ வர்த்தகர் சகோ. ஆர்கன் பிரைட்டுக்காக காத்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது ஒரு பெண் நடந்து வருவதைக் கண்டேன். ''பாவம் பெண்'' என்று நான் எண்ணினேன். நான் ஒரு மிஷனரி. நான் குஷ்டரோகத்தையும், ''பிளேக்'' வியாதியையும் கண்டிருக்கிறேன். ஆனால், இதை போன்ற ஒன்றை நான் கண்டதில்லை. நான் அவளருகில் நடந்து சென்று அவளுக்காக ஜெபம் செய்யலாமா என்று கேட்கலாம் என்றிருந்தேன். ஆனால் பார்க்கப்போனால், வேறொருத்தி அதேவிதமான தோற்றத்துடன் உள்ளே நுழைந்தாள். நீங்கள் சிறந்து காணப்பட முயல்வதைக் குறித்து நான் உங்களைக் குறைகூறவில்லை. ஆனால் மானிட வர்க்கத்தை சேர்ந்தவர்கள் போல் காணப்படுங்கள். பாருங்கள்? அது உண்மை. 49இப்படிப்பட்ட முக வர்ணத்தை உண்டாக்குவதால், அவர்கள் அழகில் சிறந்த உலகத்தையே படைத்து விட்டதாக அந்த மனிதன் கூறினார். ஆனால் என்னைப் பொறுத்தவரையில், அது ஒரு கூட்டம் அஞ்ஞானிகளைப் படைத்துவிட்டது. ஒரு பெண் அவ்வாறு செய்வாளானால், அவளுக்குள் ஏதோ ஒன்று இல்லையென்பதை அது காண்பிக்கிறது. அந்த காலியான இடம் கிறிஸ்துவால் நிறையப்பட வேண்டும். அவ்வாறு தன் மனைவியை செய்ய அனுமதிக்கும் எந்த மனிதனும் உள்ளே வெறுமையாயிருக்கிறான். அதை தன் சபையில் ஆதரிக்கும் எந்த போதகரும், தனக்குள் ஒரு வெறுமையைக் கொண்டிருக்கிறார் என்பதைக் காண்பிக்கிறார். அதை ஆதரிக்கும் எந்த ஸ்தாபனமும், அது மரித்து விட்டது என்பதைக் காண்பிக்கிறது. அது உண்மை. வேதாகமத்துக்கு திரும்புவோம்! அங்கு சிம்சோன், அப்படிப்பட்ட முக வர்ணத்துக்கு விழுந்து போனவனாக அங்கு நின்று கொண்டிருந்தான். அந்த பெரிய மனிதன் நமக்கு ஒரு உதாரணமாகத் திகழ்கிறான். ஓ, என்னே, அவர்கள் எப்படி அவனை அதில் சிக்க வைத்தனர். சிம்சோன் தான் செய்த தவறுகளையெல்லாம் எண்ணிப் பார்த்தான். அவன் எவ்வாறு தேவனுக்குத் தவறிழைத்தான் என்று. அதற்கு விரோதமாக பிரசங்கிக்கப்படும் இப்படிப்பட்ட செய்திகளைக் கேட்கும் போது, ஜனங்களுடைய மனதில் ஏதாகிலும் உதயமாகிறதா? அன்றொரு நாள் என் மனைவி என்னிடம் கூறினாள்... 50யாரோ ஒருவர் என்மேல் கோபம் கொண்டு கடிதம் எழுதியிருந்தார். அவர், “பில்லி, பெண்கள் தலைமயிரைக் கத்தரித்துக் கொள்ளுகிறதையும், இன்னும் அவர்களுடைய மற்ற செயல்களையும் குறை கூறுவதை நீர் ஏன் விட்டுவிடக் கூடாது? ஜனங்கள் நீர் தீர்க்கதரிசியென்று விசுவாசிக்கின்றனரே. அந்த பெண்கள் ஆவிக்குரிய வரங்களைப் பெற்றுக்கொள்வது எப்படி என்று நீர் போதித்து, அத்துடன் விட்டுவிட வேண்டும்'' என்று எழுதியிருந்தார். நான், ''அவர்களுக்கு மொழியின் முதலெழுத்துகளாகிய அ, ஆ, இ, தெரியாமலிருக்கும் போது, அவர்களுக்கு நான் எப்படி ''அல்ஜீப்ரா'' கணிதம் கற்றுத்தர முடியும்?'' என்று விடையளித்தேன். பாருங்கள்? நிச்சயமாக! நீங்கள் எப்படி கற்றுத்தர முடியும்? பாவமே ஒன்றுதிரண்டுள்ளதென்று அவர்களுடைய அடையாளமே காண்பிக்கிறது. வர்ணம் தீட்டிக்கொள்ளுதல் என்பது அஞ்ஞானிகளின் இயல்பு என்று எவருமே அறிவர். நான் ஒரு மிஷனரி. அஞ்ஞானிகளின் வர்ணம்! அரிசோனாவிலுள்ள இந்தியர்கள் தேவனை அறிந்துக்கொள்வதற்கு முன்பு முகத்தில், வர்ணம் தீட்டி வந்தனர். அவர்கள் தேவனை அறிந்துக்கொள்ளும் போது, நீங்கள் அவர்களிடம் அதைக் குறித்து ஒன்றுமே கூறவேண்டிய அவசியமேயில்லை. அவர்கள் தாமாகவே அதை களைந்து விடுகின்றனர். அவர்கள் தேவனிடம் சண்டையிலிருந்தனர் என்பதை அது காண்பிக்கிறது. அவர்கள் அதைக் களையும் போது, அவர்கள் தேவனுடன் சமாதானமாயிருப்பதை அது காண்பிக்கிறது. 51நமது தேசம் கிறிஸ்தவ தேசமென்றும் நாம் கிறிஸ்தவ மக்கள் என்றும் நம்மை அழைத்துக்கொள்கிறோம். நான் ஒரு நாள் ஆப்பிரிக்காவில் நின்று கொண்டிருந்த போது, தேவன் ஊனமுற்றிருந்த ஒரு மனிதனை சுகமாக்கினார், கண்கள் கோணலாயிருந்த ஒரு பையனுக்கு சுகத்தையளித்தார். சுமார் பதினைந்து நிமிடங்களுக்குள் அவர் எத்தனையோ அற்புதங்களைச் செய்தார். நான் டர்பனில் பேசிக் கொண்டிருந்த இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் பேர்களில் எத்தனை பேர் கர்த்தராகிய இயேசுவை ஏற்றுக் கொள்வார்கள் என்று நான் கேட்டதற்கு, ஏறக்குறைய முப்பதாயிரம் பேர் எழுந்து நின்றனர். எனக்கு பதினைந்து மொழி பெயர்ப்பாளர்கள் இருந்தனர். அவர்கள், ''சரீர சுகம் பெறுதலைக் குறித்தா கூறுகிறீர்கள்?'' என்றனர். ''நான் இரட்சிப்பைக் குறித்து கூறுகிறேன்'' என்று மொழி பெயர்ப்பாளர்களிடம் கூறச் சொன்னேன். நான், ''என்னைப் புரிந்து கொள்ளுகிறவர்கள் எல்லாரும்...'' என்றேன். அவர்கள் இரத்தம் தெளிக்கப்பட்ட சிறு விக்கிரகங்களையும், ஆண் மான் கண்களையும், சிங்கத்தின் நகங்களையும் வைத்திருந்தனர். எல்லா விதமான மூட பழக்க வழக்கங்களையெல்லாம் கைவிட்டு, இங்கு நின்று கொண்டிருந்த மனிதனை குணமாக்கி அவனுக்கு தெளிந்த புத்தியைக் கொடுத்த அந்த தேவனை உங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ள விரும்பினால், உங்கள் விக்கிரகத்தை தரையில் போட்டு உடைத்து உங்கள் உத்தமத்தைக் காண்பியுங்கள்'' என்றேன். அங்கு மண் புயல் தோன்றினது போல் இருந்தது. 52அங்கு பெண்கள் முழுவதும் நிர்வாணமாய் நின்று கொண்டிருந்தனர். அவர்களுக்கு முன்னால் ஒரு சிறு துணி மாத்திரம் தொங்கிக் கொண்டிருந்தது. இடுப்புக்கு மேல் அவர்கள் நிர்வாணமாய் இருந்தனர். நான், ''கைகளையுயர்த்தி, பாவியின் ஜெபத்தை ஏறெடுத்து, “தேவனே, பாவியாகிய என்மேல் கிருபையாயிரும்'' என்று கூறுங்கள். நீங்கள் நின்று கொண்டிருக்கும் அதே இடத்திலே, உங்கள் கரங்களையுயர்த்தி, கிறிஸ்துவின் ஆவியின் அபிஷேகத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள். இங்குள்ள போதகர்கள் சிலர் உங்களுக்கு கிறிஸ்தவ ஞானஸ்நானம் கொடுப்பார்கள்,'' என்றேன். அவர்கள் கரங்களையுயர்த்தின போது, வலது கைக்கும் இடது கைக்கும் வித்தியாசம் அறியாதவர்களாய், முழுவதும் நிர்வாணமாக உள்ளே வந்த பெண்கள், வெளியே நடந்து சென்ற போது தங்கள் கரங்களை மடக்கி மறைத்துக் கொண்டு சென்றனர். இயேசு கிறிஸ்துவுடன் அவர்கள் இருந்த அந்த ஒரு நிமிட நேரம், அவர்கள் நிர்வாணிகள் என்று அறிந்து கொள்ளும்படி செய்தது. ஆனால், நாமோ ஆண்டுதோறும் அதிகமாக ஆடைகளைக் களைந்து வருகிறோம். ஓ, நான்... பின்பு, அது தேவன் என்று கூறுகிறோம். அதை நீங்கள் செய்யக் காரணம் யார்? அப்படிச் செய்ய உங்களை அனுமதித்த உங்கள் ஸ்தாபனமே. அது உண்மை. உங்களை சுத்தப்படுத்திக்கொள்ள வேண்டுமெனும் எண்ணத்துடன் நீங்கள் அந்த ஸ்தாபனத்தில் வளர்ந்து வந்தீர்கள், ஆனால் அதையே நீங்கள் மறுபடியும் உள்ளே கொண்டு வந்து விட்டீர்கள். நான் தேவதூஷணம் கூறவில்லையென்று எண்ணுகிறேன்... அது தேவதூஷணம் அல்ல, அது கர்த்தருடைய வார்த்தை! நிச்சயமாக, அது கர்த்தருடைய வார்த்தையே. 53சிம்சோன் அங்கு நின்று கொண்டு, தன் உள்ளான மனச் சாட்சியில், அவன் தேவனுக்குத் தவறிழைத்தான், தேவனுடைய மக்களுக்குத் தவறிழைத்தான் என்று உணர்ந்தவனாய், தன் பிழைகளை எண்ணிப் பார்த்ததாக நாம் காண்கிறோம். அவன் அங்கு ஒரு உதாரணமாக நின்று கொண்டு, அவன் முன்பு எப்படியிருந்தான் என்றும், அப்பொழுது எந்நிலையில் இருந்தான் என்றும் சிந்தித்து பார்த்தான். அவன் அப்படி செய்தபோது, அவன் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டான். ஓ, சபை மாத்திரம் இன்றிரவு ஒரு நிமிடம் அமைதியாயிருந்து, பெந்தெகொஸ்தே நாளை நோக்கிப் பார்த்து, நாம் எங்கிருந்து துவங்கினோம் என்பதை நோக்கிப் பார்த்து, நமது ஸ்தாபன பிரமாணங்கள் நம்மை எந்நிலைக்குச் கொண்டு வந்துள்ளன என்பதை சிந்தித்துப் பார்க்குமானால் மறுபடியும் தேவனை நோக்கிக் கூப்பிடுங்கள். சிம்சோன் தேவனை நோக்கிக் கூப்பிட்டு, ''கர்த்தராகிய ஆண்டவரே, என் இரண்டு கண்களுக்காக பழிவாங்குவீராக'' என்று கதறினான். நாமும் அதேவிதமாக மனந்திரும்பி, ''கர்த்தராகிய ஆண்டவரே, இத்தனை காலமாக இவை என்னைக் குருடனைப் போல வழி நடத்தி வந்தன,'' என்று கதறுவோமானால் அதற்கான ஒரு கிரயத்தை செலுத்த வேண்டுமென்று அவன் அறிந்திருந்தான். அதை நீங்கள் இப்பொழுது அறிந்திருக்கிறீர்கள். 54என் மனைவி மேடா என்னிடம், ''நீங்கள் தேசங்கள் அனைத்தும் சுற்றித் திரிந்து பிரசங்கித்து வருகிறீர்கள். நீங்கள் மறுபடியும் அங்கு செல்லும் போது, ஜனங்கள் முன்பு செய்ததையே செய்து கொண்டிருக்கின்றனர். அதனால் என்ன பயன்?,'' என்றாள். நான், ''நியாயத்தீர்ப்பின் நாளன்று, தேவனுடைய மகத்தான ஒலிநாடாவில் பதிவு செய்யப்பட்டது போட்டு காண்பிக்கப்படும்,'' என்றேன். இவைகளைக் குறித்து நீங்கள் அறியாதவர்களாய் இல்லை. தேவன் அதை வானத்தில் முழங்கச் செய்வார். உலகத்தை ஆக்கினைத் தீர்ப்புக்குட்படுத்த அவருக்கு ஒரு சத்தம் இருக்க வேண்டும். அந்த சத்தம்தான் சுவிசேஷம். “கர்த்தாவே, என் சத்துருக்களை என் நிமித்தம் பழிவாங்கும். என் கண் பார்வையைப் போக்கினவர்களை பழிவாங்கும், கர்த்தாவே, அவர்கள் அதை பிடுங்கி விட்டார்கள். இதோ, நான் இங்கு நின்று கொண்டிருக்கிறேன்,'' தேவன், இன்னும் ஒரு விசை அவனுக்குச் செவிக் கொடுப்பதற்கு சாத்தியமுண்டு என்பதை சிம்சோன் அறிந்திருந்தான். அவனுடைய அந்த நிலையிலும் அது சாத்தியமுண்டு. ஓ சாமுவேல், அவர்கள் என்ன செய்த போதிலும், அது சாத்தியமுண்டு ''அநேகர் தீர்மானம் செய்தனர்'' என்று நாம் இன்றைக்கு அதிகமாக கேட்கிறோம். தீர்மானம் என்றால், ''கல், பாவ அறிக்கை,'' என்று பொருள். நான் ஏற்கனவே கூறினபடி, ஒரு கல்லை கூர்மையான உளியினால் செதுக்கி அதை கட்டிடத்தில் பொருத்த ஒரு கல்கொத்தன் இல்லாமற் போனால், அந்த கல்லினால் என்ன பயன்? நீங்கள் ஆண்களையும், பெண்களையும் முன் போலவே இருக்க அனுமதித்து, அவர்கள் சபையைச் சேர்ந்து கொள்ளும்படி செய்தால், தீர்மானங்கள் செய்வதனால் என்ன பயன்? அவை செதுக்கப்டாத கற்குவியலாக இருக்கும். நமக்கு இன்று தேவை தேவனுடைய வார்த்தையைக் கொண்டுள்ள ஒரு மனிதனே, கல்கொத்தனே. தேவன் அவனை அனுப்பினார் என்று நிரூபிக்க அவன் உறுதிப்படுத்தப்பட்ட வல்லமையைக் கொண்டவனாய், அவன் சபையை அசைத்து உலகப் பிரகாரமான காரியங்களினின்று அதை விலக்கி, அவர்களை தேவனுடைய குமாரர்கள் குமாரத்திகள் என்னும் செதுக்கப்பட்ட கற்களாக அவருடைய கட்டிடத்தில் அவர்களைப் பொருத்த வேண்டும். அது முற்றிலும் உண்மை. ஓ, என்னே! 55தேவன் அவனுடைய ஜெபத்தைக் கேட்பதற்கு சாத்தியமுண்டு என்பதை அவன் அறிந்திருந்தான். இன்றிரவு நாமும் அதை செய்வோமானால்! இயேசு இவ்வுலகில் இருந்த போது... யோவான்; 14:12, “என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான்'' என்றார். இயேசு கூறினார், அல்லது வேதாகமம் எபிரெயர்; 13:8ல் கூறியுள்ளது, அதை சற்றுமுன்பு நான் குறிப்பிட்டேன், இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார்'' என்று. நமக்குள் இருக்கும் ஸ்தாபன ஜீவனை கிறிஸ்துவின் ஜீவன் என்றழைத்துக் கொள்கிறோம். ஆனால் இப்படிப்பட்ட காரியங்களை நாம் செய்து வருகிறோம். ''என்னை ஆண்டவரே! என்று நீங்கள் சொல்லியும், என் கற்பனைகளைக் கைக்கொள்ளாமல் போகிறதென்ன? பாருங்கள்? ''ஏன் என்னை அப்படி அழைக்கின்றீர்கள்?'' ஓ, உங்கள் சபையில் ஐந்து அங்கத்தினர்கள் கூட இல்லாமற் போனாலும், அது சத்தியம் என்னும் உண்மையை உணர்ந்து கொள்ளுங்கள். இன்றைக்கும் அது சத்தியமாயுள்ளது. ஆனால் இன்றுள்ளவர்கள் சிம்சோன் செய்தது போல் அந்த தரிசனத்தை கிரகித்துக்கொள்ள முடியவில்லை. அவர்களுக்கு அது புரியவில்லை. அவர்கள் ''நாங்கள் நன்றாக இருக்கிறோம். எங்களுக்கு நல்ல சபைகள் உள்ளன. எங்களுக்கு ஒரு குறைவுமில்லை'' என்கின்றனர். 56''ஐஸ்வர்யமுள்ள லவோதிக்கேயா சபையின் காலத்தில் ஐஸ்வரியத்தில் ஒரு குறைவும் இராது, ஆனால் அவள் நிர்வாணியாயும், குருடாயும், பரிதபிக்கப்படத்தக்கவளாயும் இருப்பதை அறியாமல் இருக்கிறாள்,'' என்று வேதம் கூறுகிறது. ஒருவர் தெருவில் நிர்வாணியாயும், குருடாயும் நடப்பதை நீங்கள் கண்டு, அவருடைய நிலையை அவருக்கு எடுத்துரைத்து, அவர் நிர்வாணியாயிருக்கிறார் என்றும், அவர் எங்காவது சென்று மறைந்துக்கொள்ள வேண்டுமென்றும் கூறுவீர்களானால், அவரைத் தெருவிலிருந்து நீங்கள் அனுப்பிவிட சாத்தியமுண்டு. ஆனால் அதை அறிந்துக்கொள்ள அவருக்கு புத்தி சுவாதீனம் இல்லாமலிருந்து, அவர் அதைப் புறக்கணித்துப் போய்விடக் கூடும். சபைக்கும் அதை அறிந்துக்கொள்ள போதிய ஆவிக்குரிய வல்லமை இல்லை. நிர்வாணி, பரிதபிக்கப்படத்தக்கவள். குருடி, நிர்ப்பாக்கியமுள்ளவள், தரித்திரன். கிறிஸ்து வெளியில் இருந்து கொண்டு, கதவைத் தட்டி, உள்ளே வர முயன்று கொண்டிருக்கிறார். இருப்பினும் உங்களுக்கு ஒரு குறைவுமில்லை என்று சொல்லிக் கொள்கிறீர்கள். உங்களில் சிலருக்கு அது புரியாமல் இருக்கக்கூடும், ஆனால் அது தேவனுடைய சத்தியம். வார்த்தை அவ்வாறு உரைக்கின்றது. அவர்கள் தரிசனத்தை கிரகித்துக் கொள்வதில்லை. நீங்கள் அவர்களிடம் அதை எடுத்துக் கூறினாலும், அதை அவர்கள் கேளாமலேயே விட்டுவிடுகின்றனர். ஒருக்கால் அந்நேரத்தில் அவர்களுக்கு சிறிது உணர்வு உண்டாகக் கூடும், ஆனால் அடுத்த நாள் அவர்கள் அதையெல்லாம் மறந்துவிட்டு, அவர்களுடைய சீட்டாட்டத்துக்கும், துணி தைக்கும், விருந்துகளுக்கும் சென்று விடுகின்றனர். இது முழுவதுமாக மறக்கப்படுகின்றது. 57தேவன் யாருக்காவது அற்புதத்தை செய்வாரானால், அவர்கள், “ஓ, அது தானாகவே நடந்தது” என்பார்கள். பாருங்கள், பிசாசு அவர்களுடைய மனதில் விஷமேற்றியுள்ளதால், அவர்கள் எந்நிலையில் உள்ளனர் என்பதை அவர்களால் அறிந்துக்கொள்ள முடியவில்லை. அவர்கள் இறுக உட்கார்ந்து கொண்டு, கைகளைத் தட்டி, ''ஆமென்'' என்று கூச்சலிட்டு, ஆவியில் நடனமாடலாம். ஆனால் அதனால் ஒரு பயனும் இல்லை. அஞ்ஞானிகள் அவ்வாறு செய்வதை நான் கண்டிருக்கிறேன். அது உண்மை அவர்கள் பெரிய கூட்டங்களை நடத்துகின்றனர். ஓ, நீங்கள்,''சகோ. பிரன்ஹாமே, எங்களுக்கு இன்னும் எழுப்புதல் உண்டாகிக் கொண்டிருக்கிறது,'' என்கிறீர்கள். உ, ஊ, எப்படிப்பட்ட எழுப்புதல்? நீங்கள் ஸ்தாபன கூட்டங்களை நடத்துகிறீர்கள். 58கெண்டக்கியில் நாங்கள் அதை, ''நீண்ட கூட்டங்கள்'' (Protractive) என்றழைப்பதுண்டு. அதைத்தான் அது செய்கிறது, நீண்ட கூட்டங்கள், ஆனால் அது சுவிசேஷத்துக்கு மக்களைக் கவர்வதில்லை. அது உண்மை. ஆம், அவர்கள், ''நாங்கள் ஒரு கூட்டம் நடத்தினோம். என்ன நடந்தது தெரியுமா? நாங்கள் டாக்டர் இன்னாரை நகரத்துக்கு வரவழைத்தோம். ஆயிரக்கணக்கானவர் கூட்டத்துக்கு வந்திருந்தனர். எல்லா சபைகளும் ஒத்துழைத்தன,'' என்கின்றனர். நாம் என்ன செய்தோம், நமக்கு உண்மையில் எழுப்புதல் உண்டானதா? ஜனங்களை தேவனுடைய வார்த்தைக்கு மீண்டும் கொண்டு வருவதற்கு, தேவன் ஸ்தாபனங்களுக்கு சென்று கிரியை செய்கிறாரா? நாம் என்ன செய்தோம்? ஒரு கூட்டம் ஜனங்களை நாம் ஒன்றுகூடச் செய்து, அது உலகப்பிரகாரமான ஆடம்பரத்தினால் பளிங்கு போன்று ஜொலித்தது. அது முற்றிலும் உண்மை, அறிவுத்தன்மை, ஹாலிவுட்டின் பகட்டான விளம்பரக் காட்சி போன்று. ஓ, நீங்கள், “அது பாப்டிஸ்டுகள்” எனலாம். அது பெந்தெகொஸ்தேயினர், உண்மை! மேடையின் மேல் பெண்கள் இறுக்கமான ஆடைகளை அணிந்து கொண்டு குதித்து, நடனமாடுதல், காண்பதற்கு அவலட்சணமாயுள்ளது. அது பெருத்த அவமானம். அதை விவரிக்க எனக்குப் போதிய வார்த்தைகள் இல்லை. அது பெருத்த அவமானம். ஆண்கள் அங்கு உட்கார்ந்து கொண்டு, “தேவனுக்கு மகிமை! அல்லேலூயா!'' என்று கூச்சலிடுகின்றனர். நீங்கள் எப்படிப்பட்ட ஆவியை உடையவர்களாயிருக்கிறீர்கள்? இயேசு அதை கண்டு, அதற்கு விரோதமாய் கூக்குரலிடுவார் என்று உங்களுக்குத் தெரியுமா? அவர் அதற்கு கண்டனம் தெரிவிப்பார். காட்சியில் எழும்பின ஏசாயா, எரேமியா, ஆமோஸ் மற்றும் பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் இப்படிப்பட்ட காரியங்களைக் கண்டு சும்மாயிருப்பார்கள் என்று நினைக்கிறீர்களா? அவர்கள் அவர்களுடைய காலங்களில் இப்படிப்பட்ட செயல்களுக்கு விரோதமாகக் கூக்குரலிட்டு, ''நீங்கள் சேவிப்பதாக உரிமை கோரும் அதே தேவன் உங்களை அழித்துப்போடுவார்,'' என்றனர். இன்றைக்கு அவர்கள் இருந்தால், அதையே கூறுவார்கள். நிச்சயமாக! 59அப்படிப்பட்ட ஒரு பகட்டான விளம்பரக் காட்சி போன்ற கூட்டத்தினால் ஒரு பயனுமில்லை. நாம் அதிகமாக ஹாலிவுட்டைப் பெற்றிருக்கிறோம். ஆனால் அது தேவனுடைய ஆவியையும், வல்லமையும் கீழே கொண்டுவராது. ஒருக்கால் அது உற்சாகம் மூட்டலாம். ஆனால் அது தேவனுடைய வல்லமையைக் கொண்டு வராது. அவர்கள் அதற்கான கிரயத்தைச் செலுத்த பிரியப்படுகிறதில்லை. சிம்சோன் சரியாக ஜெபித்தான். அவன் என்ன சொல்லி ஜெபித்தான்? முடிக்கும் தருணத்தில் இதைக் கூற விரும்புகிறேன்: “கர்த்தாவே, என் சத்துருக்களுடன் நானும் மடியட்டும்'' என்று அவன் ஜெபித்தான். தொல்லை என்னவெனில், மரிக்கும் கிரயத்தை செலுத்த அவர்கள் விரும்புவதில்லை. நீங்கள் ஒரு சமுகத்தை உருவாக்கிக் கொண்டு, அந்த சமுகத்திலுள்ளவர்களுடன் மாத்திரமே தொடர்பு கொண்டு, சீட்டு விளையாடி, வீட்டில் தங்கி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்த்து, உருளைக் கிழங்கு வறுவலை தின்னவும், ''கோக்'' பானம் அருந்தவும் விரும்புகிறீர்கள். சபையோ காலியாயுள்ளது. அது உண்மை. நீங்கள் ஆண்டில் ஆறு மாதம் ஞாயிறு பள்ளிக்கு வருவீர்களென்று ஒரு சீட்டில் உங்களைக் கையொப்பமிட வைக்கின்றனர். மனிதனால் உண்டாக்கப்பட்ட அத்தகைய உற்சாகம்! உங்களுக்குத் தேவை பரிசுத்த ஆவியே. ”ஓ, அதை நான் பெற்றுவிட்டேன்,'' என்று நீங்கள் கூறலாம். ஆனால், அதை பெற்றுக் கொண்டுவிட்டது போல் நீங்கள் நிச்சயம் நடந்து கொள்ளவில்லை. ஆம், ஐயா. போதகர் ஒரு மணி நேரம் பிரசங்கித்தால், நீங்கள் தர்மகர்த்தாக்களின் குழுவை அழைத்து அவரை வெளியே அனுப்ப ஆயத்தமாகி விடுகிறீர்கள். அது உண்மை. நீங்கள், உங்கள் ''கேக்'' கை சாப்பிடவும், அதே சமயத்தில் அதை வைத்துக்கொள்ளவும் விரும்புகிறீர்கள். அப்படி நீங்கள் செய்ய முடியாது. இல்லை, ஐயா. உங்களை நீங்கள் அர்ப்பணிக்க வேண்டும். நீங்கள் செலுத்த வேண்டிய கிரயம் ஒன்றுண்டு. நீங்கள் துப்புரவு படுத்த வேண்டிய அவசியம் உண்டு. நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், சபை உலகம் முழுவதுமே, பிரசங்க மேடை துவங்கி, வாயில் காப்போன் அறைவரைக்கும் துப்புரவாக்கப்பட வேண்டிய அவசியம் உள்ளது. அது உண்மை. அது முற்றிலும் உண்மை. அவர்கள் கிரயத்தை செலுத்த விரும்புவதில்லை. 60ஆனால் சிம்சோன், “கர்த்தாவே, இந்த பெலிஸ்தரோடே கூட நானும் மடியட்டும்'' என்று சரியான ஜெபத்தை ஏறெடுத்தான். அவன் தவறு செய்தான். ஆனால், ''நான் மடியட்டும். ''உங்கள் மேல் வெற்றி கொண்ட சத்துருவுக்கு நீங்கள் சாக ஆயத்தமாயிருக்க வேண்டும். உங்கள் சொந்த கருத்துக்களை விட்டுவிட நீங்கள் ஆயத்தமாயிருக்க வேண்டும். தேவனுடைய வல்லமையை மறுபடியும் பெறுவதற்கென சிம்சோன் கிரயத்தைச் செலுத்த ஆயத்தமாயிருந்தான். பெண்களாகிய நீங்கள் உங்கள் தலைமயிரை வளரவிட ஆயத்தமாயிருக்கிறீர்களோ என்று வியக்கிறேன். அதை மனைவியிடம் கூற மனிதனுக்குப் போதிய தைரியம் உள்ளதோ என்று வியக்கிறேன். நீங்கள் வீட்டுக்கு தலைவராக இருக்க வேண்டியவர்கள். ஆனால் அவளோ கழுத்தாக இருந்து கொண்டு, உங்களைத் திருப்பிக் கொண்டிருக்கிறாள். அது முரணான ஒன்று! மிகுந்த அசைவூட்டும் ஒரு எழுப்புதல் இந்த பெண்களை பொதுஜன வேலைகளிலிருந்தும், தெருவில் நடக்கும் காவல்காரர் வேலையில்லிருந்தும் எடுத்துப்போடும் என்று நினைக்கிறீர்களா? அவள் சமயலைறையில் இருக்க வேண்டியவள். நீங்கள் மறுபடியும் அவளை அந்த இடத்துக்கு கொண்டு வர முடியுமென்று நினைக்கிறீர்ளா? இல்லை, ஐயா, அவள் இரட்சிக்கப்பட்டாலொழிய அப்படி செய்யமாட்டாள். அவள் இரட்சிக்கப்பட்டால், அப்படி செய்வாள் அப்பொழுது நீங்கள் அவளிடம் அதைக் குறித்து சொல்ல வேண்டிய அவசியமே இராது. அவள் தனது இடத்தை அறிந்து கொள்வாள். “பரிசுத்த ஆவியானவர் என்னை வழி நடத்துகிறார்,'' என்று நீ கூறுகிறாயா? வார்த்தைக்கு முரணான ஒன்றுக்கா? அதை பரிசுத்த ஆவி என்று அழைக்காதே. 61நீங்கள் கிரயத்தை செலுத்த சித்தமாயிருக்கிறீர்களா? பெந்தெகொஸ்தே சபையே, கிரயத்தை செலுத்த நீ சித்தமாயிருக்கிறாயா? அதுதான். நாம் எந்தவிதமான அவமானம் கொண்டவர்களாய் நின்று கொண்டிருக்கிறோம் என்று பாருங்கள். சரி, தேவனுடைய வல்லமையை மறுபடியும் பெற சிம்சோன் கிரயத்தை செலுத்த சித்தமாயிருந்தான். உங்களில் சிலர், “எங்கள் மத்தியிலும் எழுப்புதல் உண்டு, சகோ. பிரன்ஹாமே,'' என்று கூறுவதைக் கேட்கிறேன். உங்களுக்கு எழுப்புதல் உண்டான பிறகு, எதைப் பெறுகிறீர்கள்? 62கெண்டக்கியிலுள்ள லூயிவில்லில் பில்லி கிரகாம் அளித்த செய்தியில்... நான் அவருடன் அந்த காலை உணவு கூட்டத்தில் உட்கார்ந்து கொண்டிருந்தேன். அவர் எழுந்து நின்று, வேதாகமத்தை கையில் எடுத்து, “இந்த வேதாகமம் தேவன் கடை பிடிக்கும் முறைகளைக் கொண்டது'' என்றார். அது எவ்வளவு உண்மை! ஆனால் அதன்படி செய்கிறீர்களா என்பது அடுத்த கேள்வி. அவர், ”பவுல் ஒரு பட்டினத்துக்குள் பிரவேசித்து, ஒருவனை இரட்சிப்புக்குள் கொண்டு வந்தான். இரட்சிக்கப்பட்ட அவனை அந்த பட்டினத்தில் விட்டுச் சென்றான். இப்படியாக, அந்த இரட்சிக்கப்பட்டவன் அங்கேயே இருக்கின்றான். அடுத்த ஆண்டு அவன் அங்கு சென்றபோது, இரட்சிக்கப்பட்ட இந்த ஒருவன் முப்பது அல்லது நாற்பது பேர்களை இரட்சிப்புக்குள் கொண்டு வந்து, கிறிஸ்துவிடம் சேர்த்திருந்தான், ஆனால் நானோ ஒரு பட்டினத்துக்குள் பிரவேசிக்கிறேன். நான் என்ன செய்கிறேன்?முப்பதாயிரம் பேரை இரட்சிப்புக்குள் கொண்டு வந்து, அவர்கள் நான் ஒரு ஆண்டுக்குள் அங்கு மறுபடியும் செல்லும் போது, என் மூலம் இரட்சிக்கப்பட்டவர்கள் முப்பது பேர்கூட இல்லை. இதன் காரணம் என்ன?' என்று கூறிவிட்டு அங்கிருந்த போதகர்களைச் சுட்டிக்காட்டி, “சோம்பேறி போதகர்களாகிய நீங்களே காரணம். உங்கள் கால்களை மேசையின் மேல் போட்டுக் கொள்ளுகிறீர்கள், நீங்கள் ஜனங்களைச் சந்திக்கச் செல்வதில்லை,'' என்றார். 63அதில் நிறைய உண்மை உள்ளது. அது உண்மை . ஆனால் அது உண்மை அனைத்தும் அல்ல. தர்பூசணிப்பழம் தின்னும் ஒரு மனிதனைப் போல. அந்த கறுப்பு மனிதன், ''அவனுக்கு அந்த தர்ப்பூசணிப் பழத்தை ஒரு கடி கடிக்கக் கொடுங்கள்'' என்றானாம். அந்த மனிதன் ஒரு கடி கடித்துவிட்டு, “ஓ, அது மிகவும் ருசியாயுள்ளது, ஆனால் அது இன்னும் நிறைய உள்ளது'' என்றானாம். அது உண்மை. அது என்னவென்று கூறுகிறேன். அந்த மகத்தான சுவிசேஷகனுக்கு கூற நான் யார்? பில்லி கிரகாமைப் போன்ற ஒருவரிடம் ஒரு வார்த்தை கூறுவதற்கு நான் யார்? அது எனக்கு தூரமாயிருப்பதாக! அவர் தேவனுடைய ஊழியக்காரன்... அவர் என்னைக் கேட்டாலொழிய நான் அதைக்குறித்து பேசமாட்டேன். ஆனால் ஒருக்கால் இதை நான் கூறலாம், “பில்லி, பவுல் ஜனங்களை இரட்சிப்புக்குள் கொண்டு வந்த பிறகு எந்த சோம்பேறி போதகர் காலை மேசை மேல் போட்டுக் கொண்டிருந்தார்?'' என்று அவரைக் கேட்க விரும்புகிறேன். அப்பொழுது தேசத்தில் ஒரு போதகர் கூட இல்லை. அது என்ன? பவுல் அவர்களை ஒரு தீர்மானத்துடன் விட்டுவிடவில்லை. அவன் அந்த தீர்மானத்தை செய்த போது, பவுல் தேவனுடைய வார்த்தையுடன் அங்கு நின்று கொண்டு அவனை ஒரு தேவனுடைய புத்திரனாக செதுக்கினான். அதன் பிறகு அவனால் அமைதியாயிருக்க முடியவில்லை. 64இன்று அதுதான் செய்யப்பட வேண்டும். அந்த தீர்மானங்களெல்லாம் தேவனுடைய குமாரராகவும், குமாரத்திகளாகவும் செதுக்கப்பட வேண்டும். நீங்கள் சுத்தப்படுத்திக் கொண்டு தேவனுடைய வார்த்தைக்கும் சுவிசேஷத்துக்கும் திரும்புங்கள். நிச்சயமாக. அதுதான் நமக்கு அவசியம். ஆம், இன்று நாம் எழுப்புதல் கூட்டங்களை நடத்துகிறோம். ஆனால் அது என்ன? அது ஸ்தாபன எழுப்புதல். பாப்டிஸ்டுகள்; (44ல் இன்னும் பத்து லட்சம் பேர் என்னும் சுலோகத்தைக் கொண்டுள்ளனர். அதன் மூலம் நீங்கள் என்ன பெறுகின்றீர்கள்? எழுப்புதல் கூட்டம் நடந்து கொண்டிருந்த அவர்களுடைய சபை ஒன்றுக்கு சென்றிருந்தேன். ஜனங்கள் வெளியே சென்று புகை பிடிக்க அவர்கள் பதினைந்து நிமிடம் இடைவேளை கொடுக்க வேண்டியதாயிருந்தது. அந்த போதகரும் கூட புகை பிடித்தார். ''எல்லா அசுசியும் நீங்க உங்களை சுத்திகரித்துக் கொள்ளுங்கள்,'' என்று வேதம் கூறுகின்றது. பாருங்கள்? அதைக் குறித்து நாம் என்ன செய்யப் போகின்றோம்? 65''அது சரியல்ல'' என்று நீங்கள் கூறலாம். பரிசுத்த ஆவி வரும்போது இவைகள் எல்லாவற்றையும் உங்களுக்குப் போதிப்பார். பாருங்கள், அவர் நிச்சயமாக போதிப்பார். யாரோ ஒருவர் தெய்வீக சுகமளித்தலைக் குறித்து, “அது வெறொரு நாளுக்குரியது'' என்றார். பாருங்கள், முன்பு நடந்ததை அவர் சுட்டிக் காட்டினார். ''ஒருக்கால் அது ஆயிரம் வருட அரசாட்சியில் முடிவு பெறலாம். ''ஆயிரம் வருட அரசாட்சியின் போது, நீங்கள் சாகாமையைத் தரித்துக் கொண்டவர்களாயிருக்கும் போது, உங்களுக்கு ஏன் தெய்வீக சுகமளித்தல் அவசியம்? இன்று தான் அந்த நாள். இதுவே அந்த நாள். “நல்லது, எங்கள் மத்தியில் எழுப்புதல் உண்டாகின்றது. சபையில் ஒழுக்கம் சிதைவுபட்டு வருவதைப் பாருங்கள். ஒவ்வொரு ஆண்டும் அது எவ்வளவு மோசமாகிக் கொண்டு வரும்வதைப் பாருங்கள். நமது பெந்தெகொஸ்தே குழுக்கள் எவ்வாறு விழுந்து போயுள்ள என்பதைப் பாருங்கள். உங்கள் கண்களை மூடிக்கொண்டு, பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு நான் இங்கிருந்த போது இருந்த நிலையை யோசித்துப் பாருங்கள், பின்பு கண்களைத் திறந்து இன்றுள்ள நிலையைப் பாருங்கள். அது உண்மையென்று உங்களுக்குத் தெரியும்! அதுபாவமும் அவமானமுமாய் உள்ளது. அது உண்மை. வார்த்தையை விட்டு மேலும் மேலும் விலகி சென்று கொண்டேயிருத்தல். 66சிம்சோன் தனது பின் வாங்கிப்போன நிலையை அறிந்திருந்தான். அவன் அங்கிருந்த போதும், அந்நேரத்துக்கான சவாலை சந்திக்க அவனுக்கு பலமில்லை என்பதை அவன் உணர்ந்திருந்தான். அவனுடைய இயந்திர சாதனம் (machinery) அங்கிருந்தது. ஒரு கழுதையின் தாடை எலும்பை எடுத்து பத்து இலட்சம் பெலிஸ்தரைக் கொன்ற அதே தசைகள் அந்த மனிதனின் உடலில் இருந்தன. காசாவின் வாசல்களை மலையின் உச்சிக்கு சுமந்து சென்ற அதே தோள்கள் அவன் உடலில் அப்பொழுதும் இருந்தன. ஓ, நான் வேறொன்றை இங்கு கூற முடியும், பாருங்கள். ஆனால் அந்நேரத்துக்கான சவாலை அவனால் சந்திக்க முடியாது என்பதை அவன் அறிந்திருந்தான். அதுபோன்று சபையும், ஒழுக்கச் சிதைவு கொண்டுள்ள இன்றைய நிலையில் இம்மணி நேரத்துக்கான சவாலை சந்திக்க முடியாது என்பதை அறிந்துள்ளது. கம்யூனிஸம் எல்லாவற்றையும் கைப்பற்றி வருகிறது. ஆனால், நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்? தெய்வீக சுகமளித்தலிலும் தேவனுடைய வல்லமையிலும் நம்பிக்கையில்லாத இந்த ஸ்தாபன ஜனங்களுடன் நாம் நுகத்திலே பிணைக்கப்பட்டு ஆறுதல் கொண்டுள்ளோம், இரண்டு பேர் ஒருமனப்பட்டிருந்தாலொழிய ஒருமித்து நடந்து போக முடியுமா? நாம் அப்படிப்பட்ட ஒன்றுடன் நம்மை நுகத்தில் பிணைத்துக் கொண்டு, தேவன் உதவி செய்வாரென எதிர்ப்பார்க்கிறோம்... ''நாம் அதிக எண்ணிக்கை'' என்கிறோம். தேவன் அதிக எண்ணிக்கையை கவனிப்பதில்லை, அவர் நற்பண்பையே எதிர்நோக்குகிறார். 67நற்பண்புள்ள ரெபேக்காளைக் கண்டு பிடிக்குமளவும் எலியேசர் வியர்வை சிந்த பாடுபட்டான் என்று நான் கூறினேன், அதன் பின்பு அவன் அவளுக்கு உடை உடுத்தி ஆயத்தப்படுத்தி, அவனுடைய செய்தியை அமரிக்கையாய் கேட்கும்படி செய்தான். ஆனால் இன்றுள்ள தொல்லை என்னவெனில் நீங்கள் நற்பண்புள்ளவரைக் கண்டுபிடிக்கும் போது, உடை உடுக்க அவர்களைப் போதிய நேரம் அமரிக்கையாக நிறுத்துவதென்பது கடினமாயுள்ளது. அது உண்மை. ஏதோ ஒருரிக்கி அவர்களை வேறொரு திசையில் இழுத்து சென்று விடுகிறான். அது உண்மை. ஆனால் அங்கோ, எலியேசர் வியர்வை சிந்தபாடுபட்டான். 68சிம்சோனுக்கு தசைகள் இருந்த போதிலும், அவனுக்கு பலமில்லை என்பதை அவன் அறிந்திருந்தான். நமக்கு முறைப்படி வேலை செய்யும் குழுக்கள் (machinery) அனைத்தும் உள்ளன. நமக்கு பெரிய மாவட்ட போதகர்கள், பேராயர்கள், முக்கிய பேராயர்கள், போப்பாண்டவர்கள், குருக்களாட்சி முறைப்படி வேலை செய்யும் குழுக்கள் அனைத்தும் உள்ளன. நமக்கு மிகப் பெரிய கட்டிடங்களும், உலகிலுள்ள பெரும்பாலான பணமும் உள்ளன. ஆனால் இவைகளினால் நமக்கு என்ன பயன்? அது சத்தமிடுகிற வெண்கலம், போலவும் ஓசையிடுகிறகைத்தாளம் போலவும் உள்ளது. அது உண்மை. ஆனால் இந்நேரத்துக்கான சவாலை நாம் சந்திக்க முடியவில்லை என்பதை நாம் அறிந்துள்ளோம். 69இன்று ருஷியாவில், கம்யூனிஸம் ஆதிக்கம் செலுத்துவது மாத்திரமல்ல, அது உலகம் முழுவதும் கைப்பற்ற முயல்கிறது. அங்கு என்ன நடக்கிறது? யாரோ ஒருவர் தான் உறுதி கொண்டுள்ள ஒன்றை, அது தவறாயிருந்த போதிலும், எழுந்து நின்று எடுத்துக் கூற துணிச்சல் படைத்துள்ளார். ருஷியாவின் ஜனத்தொகையில் ஒரு சதவிகிதம் மாத்திரமே. கம்யூனிஸ்டுகள். ஒரு சதவிகிதம் மாத்திரமே தொண்ணூற்றொன்பது சதவிகிதம் ஜனங்கள் இப்பொழுதும் கிறிஸ்தவர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். அவர்கள் சுயாதீனமாயுள்ளனர், ஆனால் அவர்களுக்கு சுவிசேஷத்தை அறிந்து கொள்ளக்கூடிய அறிவுத்திறன் (IQ) இல்லை. அவர்கள் பணம் படைத்திருந்தாலும், சுவிசேஷம் அளிப்பதை அவர்கள் பெற்றிருக்கவில்லை. அவர்களுக்கு தைரியமும், கிருபையும் இல்லை. ருஷியாவில் தேவனுக்கு அவசியமாயுள்ளது, தேவனுடைய வல்லமையினால் - பரிசுத்த ஆவியின் வல்லமையினால் - அபிஷேகம் பண்ணப்பட்டுள்ள ஒரு மனிதன். 70சிம்சோன் தனக்குத் தேவை என்னவென்பதை அறிந்திருந்தான். நாம் முழு அமெரிக்காவையும் திருப்பி, ஒவ்வொருவரையும் ஆலயத்துக்கு போகச் செய்யக்கூடும். இருப்பினும் அதை நாம் பெற்றுக்கொள்ளவில்லை. நமக்கு அவசியமானதை நாம் பெற்றுக்கொள்ளவில்லை. சீஷர்கள் பெந்தெகொஸ்தேவுக்குச் செல்லும் வரைக்கும் அதை பெற்றிருக்கவில்லை. அவர்கள் மூன்று ஆண்டுகள் பிரசங்கித்த பின்பு, அவர்கள் அதை பெற்றிருக்க வில்லையென்று இயேசு அவர்களிடம் கூறினார். அதன் பிறகும் அவர்களுக்கு அது அவசியமாயிருந்தது, சபைக்கு அது அவசியமாயுள்ளது. அது உண்மை. கவனியுங்கள், சிம்சோன் தனக்கு அவசியமிருந்ததை அறிந்திருந்தான். அவன் குறைவுள்ளவனாயிருந்தான். ஸ்தாபனங்கள் அதை அளிக்க முடியாது. அவர்கள் வார்த்தையை உறுதிப்படுத்துவதில்லை, அவர்கள் அதற்கு விரோதமாக போதிக்கின்றனர். ஆம். அது உங்களுக்குத் தெரியும். சிம்சோன், எல்லா ஆதிக்கத்தைப் பெற்றிருந்த போதிலும், தனக்குத்தானே குறைவுள்ளவன் என்பதை உணர்ந்திருந்தான். அவனைக் கவனியுங்கள்! பெலிஸ்தர் அவர்களுடைய வெற்றியின் காரணமாக பெருமிதங் கொண்டனர். அவன் தன் தலையை மேலேயுயர்த்தி, முன்பு கண்கள் இருந்த குழிகளிலிருந்து கண்ணீர் வடிந்து, அவனுடைய உதடுகளை அசைத்து ஜெபம் செய்வதை அவர்கள் கவனிக்கவேயில்லை. அவர்கள் கொண்டாட்டத்தில் லயித்திருந்தனர். இந்த யேசபேலுக்கு தேவன் தம்மை மறுபடியும் வெளிப்படுத்த வேண்டுமென்று அவன் விரும்பினான். ஓ, சில சிம்சோன்கள் எழும்பினால் எவ்வளவு நலமாயிருக்கும்! ஓ, சபையே! ஒரு புது ஸ்தாபனத்தையோ வேறொரு கோட்பாட்டையோ, பின்மாரியையோ தொடங்குவதல்ல அது. நமக்கு தேவனுடைய வல்லமை தேவை. அது உண்மை. 71தேவன் அவனுடைய ஜெபத்துக்கு பதிலளித்தால் என்ன நேரிடுமென்று அவன் அறிந்திருந்தான், ஆனால் அந்த நிலைமையை சந்திக்க அவன் ஆயத்தமாயிருந்தான். அவன் மிகவும் ஆர்வமுள்ளவனாயிருந்தான். ஓ, சபையும் இன்றிரவு மிகுந்த ஆர்வமுள்ள நிலையில் நின்று கொண்டு, இவ்வுலகில் தனக்கு அருமையாயுள்ள எல்லாவற்றையும் விட்டுவிட வேண்டுமென்று அறிந்திருக்குமானால்! இன்றிரவு ஆண்களும், பெண்களும் இது உலகத்திலுள்ள எல்லாவற்றிலிருந்தும் தங்களைப் பிரிக்குமென்று அறிந்துக்கொள்ள ஆயத்தமுள்ளவர்களாயிருந்தால் போதகர்களே, அவர்கள், ''டாக்டர் இன்னாரே, அது அற்புதமாயிருந்தது. இன்று பிற்பகல் எங்களுடன் நீச்சலடிக்க வருவீர்களா?,'' என்று கூறி உங்கள் முதுகில் தட்டுவதை நிறுத்திவிடுவார்கள். சபையிலிருந்து, பங்கோ விளையாட்டுக்களையும், பந்தயங்களையும் லாட்டரிகளையும் எடுத்து விடுங்கள். பங்கோ (Bunco) விளையாட்டு ஒரு லாட்டரியே. போதகருக்கு சம்பளம் கொடுக்க 'சூப்' இரவுவிருந்து நடத்துவதை விட்டுவிட்டு, தசமபாகம் கொடுத்தல் என்னும் தேவனுடைய முறைக்குத் திரும்புங்கள்! அப்படி செய்ய அவர்களுக்கு விருப்பமா? இல்லை, ஐயா, அவர்களுக்கு விருப்பமில்லை. அதற்காக செலுத்த வேண்டிய கிரயம் என்னவென்று உங்களுக்குத் தெரியும். உங்களை அந்த பெண்கள் பழமை நாகரீகமுள்ளவர்கள் என்று அழைப்பார்கள். ஆனால், தேவனோ உங்களை ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்றழைப்பார். 72நீங்கள் மரிக்க ஆயத்தமா? அதுதான் இன்றுள்ள தொல்லை. நீங்கள் ஹாலிவுட்டுக்கு உயிருள்ளவர்களாக இருந்து, அதே சமயத்தில் தேவனுக்காக உயிருள்ளவர்களாக இருக்கவும் விரும்புகிறீர்கள். இவையிரண்டும் கலவாது. ஒரு வித்து. “கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகாவிட்டால் தனித்திருக்கும்,'' என்று இயேசு கூறினார். நீங்கள் ஒரு பலனையும் கொடுக்க முடியாது. ஓ, இயேசுவின் நாமம் சபையே! அது எவ்வளவு மகிமையுள்ள சபை. இயேசுவின் நாமம் என்பது எவ்வளவு மகிமையான நாமம்! நீங்கள் மரிக்க ஆயத்தமா? 'அசெம்பிளீஸ் ஆஃப் காட்' சபையே, நீங்கள் மரிக்க ஆயத்தமா? மெதோடிஸ்டு, பாப்டிஸ்டு, பிரிஸ்பிடேரியன் சபைகளே, உங்கள் சத்துருவின் பொருட்டு நீங்கள் மரிக்க ஆயத்தமா? தியாகம் என்னும் கிரயத்தை உண்மையாக, உத்தமமாக செலுத்த உங்களுக்கு விருப்பமா? ''நான் முயன்று பார்க்கிறேன்'' என்று கூறுவதல்ல. அப்படியானால் நீங்கள் இன்னும் ஆயத்தமாகவில்லை, நீங்கள் கிரயத்தை செலுத்த ஆயத்தமாகி, மரிக்க வேண்டும். 73தந்தைமார்களே, தாய்மார்களே, உங்கள் வீட்டில் ஜெபத்தை ஏற்படுத்தி, தொலைகாட்சி பெட்டியை எடுத்துப் போட ஆயத்தமா? மேசையின் மேலுள்ள சீட்டுக்கட்டை தூக்கி எறிய ஆயத்தமா? உங்கள் பிள்ளைகள் படிக்கும், காமிக்ஸ் புத்தகங்கள், பிசாசு அவர்களுக்கு கொடுக்கப் போகும் அதிர்ச்சிக்கு அவர்களுடைய பிஞ்சு உள்ளங்களை ஆயத்தப்படுத்துகின்றன. உங்கள் பழைய குடும்ப ஜெபத்தை மறுபடியும் நிலைநாட்ட ஆயத்தமா? அல்லது இப்பொழுதுள்ள உங்கள் வழியில் நீங்கள் தொடர்ந்து செல்ல விரும்புகிறீர்களா? நீங்கள் தொடர்ந்து செல்ல விரும்பினால், அதை விட்டு வெளியே வரும் நிலையில் நீங்கள் இன்னும் இல்லை. நீங்கள் சிம்சோனைப் போல், செலுத்த வேண்டிய கிரயத்தைக் கண்டு, ஆயத்தமடைந்து, ''கர்த்தாவே, நானும் அவர்களோடு கூட மடியட்டும்“ என்று கூற வேண்டுமென்று ஜெபிக்கிறேன். கர்த்தர் தன் ஜெபத்துக்கு உத்தரவு அருளுவாரானால், அதனால் உண்டாகும் விளைவு என்ன என்பதை சிம்சோன் அறிந்திருந்தான். நான் இங்கு வந்த முதற்கொண்டு கவனித்து வருகிறேன். ஜனங்கள் பீடத்தண்டை வருகின்றனர், பரிசுத்த ஆவி அவர்களிடம் வருகிறது. ஆனால் அவர்களோ மரிக்க விரும்புவதில்லை. அவர்கள் இந்த உலகத்துக்கு உயிருள்ளவர்களாக வாழ விரும்புகின்றனர். ஒரே சமயத்தில் இரண்டு தெய்வங்களுக்கு ஊழியஞ் செய்ய உங்களால் கூடாது. தேவனுக்கு ஊழியஞ் செய்ய, எல்லாவற்றையும் விட்டுவிட ஆயத்தமாயிருக்கிறீர்களா?'' ''இந்த ஒரு விசை மாத்திரம், ஆண்டவரே என்று சிம்சோன் கதறுவதைக் கேளுங்கள். 74பெந்தெகொஸ்தே சபை, ஜெனரல் கவுன்சில், அசெம்பிளிஸ் ஆஃப் காட், சர்ச் ஆஃப் காட், இன்னும் மற்றவர்களாகிய நீங்கள், கிரயத்தை செலுத்த உங்களுக்கு விருப்பமுண்டா? இன்னும் ஒரு விசை, ஆண்டவரே! இதோ நான் நின்று கொண்டிருக்கிறேன். என் ஒருத்துவ சகோதரனுடன் அல்லது திரித்துவ சகோதரனுடன் கைகுலுக்க எனக்கு கிறிஸ்தவ ஆவி இல்லை. அதை செய்ய எனக்குத் துணிச்சல் இல்லை. அதை செய்ய எனக்கு கிருபை இல்லை. அது என்னை எங்கு கொண்டு சென்றுள்ளதென்று நான் அறிகிறேன். இதன் விளைவாக எல்லாம் உடைந்து, ஸ்தாபனங்கள் உருவாகி, ஒருவருக்கொருவர் ஐக்கியம் கொள்ளாமல், சபையோர் ஒருவருக்கொருவர் விரோதம் கொண்டு, நாங்கள் பரிசுத்த ஆவியினால் ஒரே களி மண்ணைக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறோம் என்பதை மறந்தவர்களாய், தெருவில் கண்டாலும் கூட ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வதில்லை'' என்று கூறுவீர்களா? 75“இந்த ஒரு விசை, ஆண்டவரே, அது நடக்கட்டும்” என்று நீங்கள் கதற ஆயத்தமா?அப்படியானால், தேவன் நிச்சயமாக உங்கள் ஜெபத்துக்கு செவி கொடுப்பார், அந்த மனிதன் தன்னுடைய எல்லா தசைகளுடனும் நின்று கொண்டிருந்த போதிலும், குருடனாயிருந்தான் என்பதைக் கவனியுங்கள். அவன் கிரயம் என்னவென்பதை அறிந்திருந்தான், அது சாத்தியமென்று அவன் அறிந்திருந்தான். அவன், ''இந்த ஒரு விசை, ஆண்டவரே! இந்த ஒருவிசை மாத்திரம் என் கண்களுக்காக பழிவாங்கும்'' என்று ஜெபித்தான். அவன் அப்படி ஜெபம் செய்தபோது, தேவன் அதற்கு உத்தரவு அருளினார், அவனுடைய உடலில் இருந்த ஒவ்வொரு தசை நாரும் இறுக்கம் கொள்ள ஆரம்பித்தது. அந்த தசைகளின் மேல் ஆவி இறங்கினது. ஓ, நமக்கு ஒவ்வொரு புதன் கிழமை இரவு ஜெபக் கூட்டத்திலும், நமது ஞாயிறு பள்ளியிலும் பரிசுத்த ஆவி இறங்கி தேவனுடைய வல்லமையின் தசை நார்கள் இறுக்கம் கொள்ளுமானால்! கேலித்தனமாக அல்ல. ஆனால் உண்மையான ஆவி வந்து இருதயத்தின் இரகசியங்களை வெளிப்படுத்தி, அங்கு காணப்படும் பாவத்தையெல்லாம் சரிபடுத்தி, பொல்லாங்கை நீக்குமானால். 76அவனுடைய தசை நார்கள் இறுக்கம் கொண்ட போது, அவன், ''அவர்களுடன் நானும் மடியட்டும். அவர்களை நிர்மூலமாக்கவே நான் பிறந்தேன். அவர்களுடன் நானும் மடியட்டும்'' என்றான். அவனுடைய தசை நார்கள், தசைகள் இறுக்கம் கொண்டன, அவனுடைய பிரமாண்டமான தசைகள் பலம் கொண்டன, பரிசுத்த ஆவி அவன் மேல் அசைவாடத் தொடங்கினார். அவன் தன் பராக்கிரமத்தினால் அந்த பாறைத் தூணை தன் மகத்தான வல்லமையினால் அசைத்து திருப்பினான். அந்த பாறைத் தூண் விழுந்தது. அது கீழே சாய்ந்தது. நமக்குத் தேவையானதெல்லாம். “இன்னும் ஒருவிசை, ஆண்டவரே!'' என்னும் உத்தமமான ஜெபமே. வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தை நாம் அடைந்திருக்க வேண்டும், ஆனால் நாமோ இன்னும் வனாந்தரத்தில் அலைந்து கொண்டிருக்கிறோம். இஸ்ரவேல் ஜனங்கள் தங்களால் கைக்கொள்ள முடியும் நியாயப்பிரமாணம் ஒன்றைக் கேட்டனர். ஆனால், அவர்களால் அதை கைக்கொள்ள முடியவில்லை உங்களால் முடியாது. கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ளுங்கள்! நாம் பெருமையடித்துக் கொள்ளவும், மற்றவரைக் காட்டிலும் வித்தியாசப்பட்ட வகுப்பினரைப் பெறவும் ஒரு பிரத்தியேக உபதேசத்தை ஏற்படுத்திக் கொண்டோம். ஆனால் நாம் எங்கு அடைந்து விட்டோம் என்று பாருங்கள். அது நம்மை குருடாக்கிப் போட்டது. 77அந்த பெரிய ஸ்தாபனம் கீழே சாய்ந்தது. தேவன் உள்ளே வரும்போது, மற்றவை விழுந்து விடுகின்றன. அது எப்பொழுதும் அவ்வாறே இருந்து வந்துள்ளது. அப்பொழுது சிம்சோன் மிகப்பெரிய வெற்றியடைந்தான். ஓ, ஜீவனுள்ள தேவனுடைய சபை இன்று நின்று கொண்டு, ''இன்னும் ஒரு விசை, ஆண்டவரே! இன்னும் ஒரு விசை! எனக்குள்ள எல்லாவற்றையும் நான் கிரயமாக கொடுக்க வேண்டும் என்ற நிலைமை ஏற்பட்டாலும், எழுப்புதலை எங்களுக்கு அனுப்பும். கர்த்தாவே, எழுப்புதலை என்மேல் அனுப்பும்'' என்று கூறுவதை நான் காண நேர்ந்தால் நலமாயிருக்கும். இங்கு இன்றுள்ள முன்னூறு பேர்களுக்கும் அதிகமானவர்கள். ''கர்த்தராகிய ஆண்டவரே, இன்னும் ஒரு விசை நான் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவதாயிருக்கிற இயேசு கிறிஸ்துவை காணட்டும். அவர் என் அருகில் இருக்கிறார் என்று நான் அறிந்து கொள்ளட்டும், என்னைக் கவனித்துக்கொள்ள அவர் இங்கிருக்கிறார் என்பதை நான் அறிந்து கொள்ளட்டும். நான் இப்பொழுது சித்தம் கொண்டிருக்கிறேன்'', என்று ஒரே சத்தத்துடன் ஜெபிப்பதைக் கேளுங்கள். 78ஓ, சத்துருக்கள் அனைவரும் அழிந்து போயினர், பெந்தெகொஸ்தேயினரே, இன்றிரவு உங்கள் கடமையில் நில்லுங்கள். நீங்கள் எதையெல்லாம் நிர்மூலமாக்க வேண்டுமென்று பிறந்தீர்களோ, அதை நிர்மூலமாக்குங்கள். மனத்திரும்பி, ''கர்த்தாவே, இன்னும் ஒருவிசை! இன்னும் ஒரு விசை அதை நாங்கள் காணட்டும்'' என்று உரக்க சத்தமிடுங்கள். என் நண்பனே, இதைக் கூற விரும்புகிறேன். உன் சத்துரு உன்னை நிர்மூலமாக்குவதற்கு முன்பு, நீ அவனை நிர்மூலமாக்குவது நலம். அந்த பழமை நாகரீகமுள்ள ஜெபக் கூட்டத்தை மறுபடியும் நடத்து. பழமை நாகரீகமுள்ள மனந்திரும்புதலில், அவர்கள் மரித்து பாவத்துடன் எவ்வித தொடர்பும் இல்லாத நிலை அடையும் வரைக்கும் பீடத்தண்டையில் தங்கியிருந்தனர். ஒரு ஸ்திரீ பீடத்தண்டை சென்று பாவத்துக்கு மரித்துவிட்டு, அடுத்த நாள் தலை மயிரைக்கத் தரித்துக்கொண்டு, முகத்தில் வர்ணம் தீட்டிக்கொண்டு வருவதை நீங்கள் காண முடியாது, அப்படி ஒன்று இருந்ததே கிடையாது. பரிசுத்த ஆவி போதிக்கிறது - பரிசுத்த ஆவியின் தன்மை அப்படி செய்கிறது. பெண்கள் வெளியே பாலுணர்ச்சி தூண்டும் உடைகள் உடுத்தி, உள்ளே வரும் போது தங்களை மூடிக்கொள்வதை நீங்கள் காண்பதில்லை. ஒரு மனிதன்தன் கருத்துக்கு உறுதியாக நிற்க பயப்படுவதையோ, அல்லது ஒரு செயலைத் தைரியமாகப் புரிந்த காரணத்தால், தன் மனைவி அவளை விட்டுப் போய் விடுவாளோ என்று பயப்படுவதையோ நீங்கள் காண முடியாது. மனிதர் ஆண்மைத்தனம் கொண்டவர்களாகவே அந்நாட்களில் இருந்தனர். அவர்கள் மனிதர்களைப் போல் தைரியமாகப் பேசி, தங்கள் குடும்பத்தை நடத்தினர். அவர்களே குடும்பத்தின் தலைவராக இருந்தனர். ஆனால் இந்த வினோதமான அமெரிக்கர்கள்.... 79இங்கு உட்கார்ந்து கொண்டு என்னையே பார்த்துக் கொண்டிருக்கும் அந்த கிரேக்க மொழி பண்டிதர் என்னிடம் ஒன்றைக் கூறினார். அவர் என் செய்திகளை ஒலி நாடாக்களில் கேட்டிருக்கிறார். அவர் என்னிடம், ''சகோ. பிரன்ஹாமே, உமக்கு கல்வியறிவே கிடையாது. ஆயினும் உமது வார்த்தைகளும் உமது செய்திகளும் கிரேக்க வேதாகமத்தின் வியாக்கியானத்துடன் பிழையின்றி இணைகின்றது. அது முற்றிலும் சரியாயுள்ளது. நீங்கள் கூறியுள்ளது முற்றிலும் சரியே'' என்றார். அவர் தொடர்ந்து, ''லவோதிக்கேயா'' என்னும் சொல்கிரேக்க மொழியில், ''ஸ்திரீ'' என்று அர்த்தம் கொள்ளும் என்றார். இது ஸ்திரீயின் உலகம், ஸ்திரீயின் சபை, ஸ்திரீயின் காலம். அநேகர்... எந்த காலத்தில் தேவன் இப்படிப்பட்ட ஒரு நிலையை அடைந்தார்? ஆம், எழுப்புதலை மறுபடியும் கொண்டுவர நீங்கள் ஆயத்தமா? நீங்கள் ஆயத்தமா? ஒரு ஸ்திரீ, ''நான் விரும்புவதைச் செய்ய எனக்குரிமையுண்டு. அது அமெரிக்கா எனக்களித்துள்ள சிலாக்கியம்'' என்றாள். அது அமெரிக்கா உனக்கு அளித்துள்ள சிலாக்கியமாயிருக்கலாம். ஆனால், அது தேவன் உனக்களித்த சிலாக்கியம் அல்லவே! ஒரு வெள்ளாடு எப்பொழுதும் சண்டையுண்டாக்கும். ஆனால் ஒரு செம்மறியாடோ அமைதியாயிருந்து, தன் உரிமைகளை பறிகொடுத்துவிடும். பாருங்கள்? நீங்கள் உண்மையில் தேவனுடைய பிள்ளையாயிருப்பீர்களானால், உங்கள் அமெரிக்க உரிமைகளை பரிசுத்த ஆவிக்கு விட்டுகொடுத்து, அவர் நீங்கள் இருக்க வேண்டிய விதத்தில் உங்களை வளர்க்க அனுமதிப்பீர்கள். ''இன்னும் ஒரு விசை, ஆண்டவரே!'' ஓ, என்னே! 80ஓ, சபையே, ஹாலிவுட் என்னும் தெலீலாளை விட்டுவிடுங்கள். இல்லையென்றால் அவள் உங்களைக் கொன்று போடுவாள். அவள் உங்களை மூச்சுத்திணற வைத்து உங்கள் ஆவிக்குரிய வாழ்க்கையை உங்களை விட்டு எடுத்துப் போடுகிறாள். அவளை விட்டுவிடுங்கள்! மேடையின் மேல் உங்கள் ஹாலிவுட் நடிப்பு, உங்கள் ஹாலிவுட் மேல் பூச்சு, உலகிலுள்ள மற்றவர் செய்வது போலவே நமது கூட்டங்களும் பெரிதாக, பெரிய சபைகளில் நடத்தப்பட வேண்டும் என்பது போன்றவை ஒரு சுவிசேஷகர் ஒரு நகரத்துக்கு வரவேண்டுமானால், அவருக்கு ஒரு குறிப்பிட்ட தொகையைத் தருவதாக நீங்கள் வாக்கு கொடுக்க வேண்டும். இல்லையென்றால் அவர் வரமாட்டார். எவ்வளவு கேலித்தனமான செயல்! உங்கள் பொக்கிஷம் எங்கேயுள்ளது என்பதை அது காண்பிக்கிறது, அங்குதான் உங்கள் இருதயமும் இருக்கும். முழு இருதயத்தோடு தேவனிடத்திற்கும் அவருடைய வார்த்தைக்கும் திரும்புங்கள். நாம் இன்னும் ஒரு விசை, கர்த்தாவே! இன்னும் ஒருவிசை உமது பிரசன்னத்தை எங்களுக்கு காண்பியும்'' என்று உரக்க சத்தமிடுவோம். 81இயேசு, ''இன்னும் கொஞ்சக் காலத்தில் உலகம்'' என்று கூறினார். அது உலக ஒழுங்கு, காஸ்மாஸ் (Cosmos). ''உலக ஒழுங்கு என்னைக் காணாது, நீங்களோ என்னைக் காண்பீர்கள்“ அதாவது விசுவாசி. ''நான் காலம் முடியும் வரைக்கும் உங்களுடனே வாசம் பண்ணி உங்களுக்குள்ளே இருப்பேன். நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினால், நான் செய்கிற கிரியைகளை நீங்களும் செய்வீர்கள். இவைகளைப் பார்க்கிலும் பெரிய கிரியைகளையும் செய்வீர்கள். என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான்”. பாவனை விசுவாசி அல்ல, ஆனால் உண்மையாக விசுவாசிக்கிறவன். ஓ சபையே, இயேசு மரித்துப்போன நிலையில் இல்லையென்று நாம் விசுவாசிக்கிறோம். அவர் மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்தார். அவர் இப்பொழுது இங்கேயிருக்கிறார். நான் ஆதாரம் இல்லாமல் அப்படி கூறமாட்டேன். அவர் இங்கிருக்கிறார் என்று நானறிவேன். அவர் இங்கு தம்மை நிரூபித்துக் கொண்டிருக்கிறார். தமது வார்த்தையை உறுதிப்படுத்துவதற்கென அவர் எப்பொழுதும் இங்கிருக்கிறார். இன்றிரவு அவர் இங்கு நின்று கொண்டிருப்பாரானால், அவர் என்ன கூறுவார்? அவர் மறுபடியுமாக அவர் மறுபடியுமாக வார்த்தைக்குத் திரும்பி வந்து, அவர் முன்பு கூறினதையே கூறுவார். ''அந்த இயேசு பேசினாரா?'' என்று நீங்கள் கேட்கலாம். இல்லையென்றால், நான் உங்களிடம் நிச்சயம் அப்படி கூறியிருக்க மாட்டேன். நிச்சயமாக! ''அதை எப்படி நிரூபிக்க முடியும்?'' ஒரு நிமிடம் தலை வணங்குங்கள். 82பரலோகப் பிதாவே, உங்கள் ஊழியர் தங்களுக்கு விருப்பமான எல்லாவற்றையும் பேசி, சத்தியத்தை ஜனங்களுக்கு தெளிவாக எடுத்துரைக்கக் கூடும். இருப்பினும், அது வெறும் உணர்ச்சியே. அது மனித உதடுகள் சபையோரிடம் பேசுதலே. கர்த்தாவே, நீர் இயற்கைக்கு மேம்பட்டவர். நீர் எந்த இடத்தில் இருந்தாலும், அங்கு இயற்கைக்கு மேம்பட்ட அடையாளங்களும், விவரிக்க முடியாத அற்புதங்களும் நடக்கும். நீர் இவ்வுலகில் இருந்த போது, நீர் ஜனங்களின் மத்தியில் நடந்து வியாதியஸ்தரை குணமாக்கினீர். ஒருமுறை ஒரு ஸ்திரீ உம்முடைய வஸ்திரத்தைத் தொட்டாள். நீர் திரும்பிப் பார்த்து, “என்னைத் தொட்டது யார்?'' என்றீர். அது யாரென்று உமக்கே தெரியாமல் என்னைப் தொட்டது யார்?'' என்று கேட்டீர், ஆனால் உமக்குள் தேவன் இருந்தார். நீர் இருதயத்தின் இரகசியங்களை அறிந்து கொண்டீர். ஏனெனில், ''தேவனுடைய வார்த்தையானது இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், இருதயத்தின் நினைவுகளை வகையறுக்கிற தாயும் இருக்கிறது'' என்று வேதம் கூறுகிறது. நீர் சுற்றிலும் பார்த்த போது, அந்த ஸ்திரீதான் மறைந்திருக்கவில்லை என்பதை கண்டு கொண்டாள். அவள் விசுவாசம் அவளை இரட்சித்ததாக நீர் அவளிடம் கூறினீர். ''பிதாவானவர் முதலில் எனக்குக் காண்பிக்காமல் நான் ஒன்றையும் செய்வதில்லை. பிதாவானவர் கிரியை செய்கிறார், நானும் அந்தப்படியே செய்கிறேன்,'' என்று நீர் கூறினீர். இன்றிரவு நீர் இங்கிருப்பீரானால், பிதாவானவர் உமக்குக் காண்பிப்பதையே நீர் செய்வீர். 83கர்த்தாவே, இந்த சபையை இன்னும் ஒரு விசை கொண்டு வர வேண்டுமென்று ஜெபிக்கிறேன். கர்த்தராகிய தேவனே, இந்த ஜனங்கள் வெவ்வேறு சபைகளிலிருந்து இன்றிரவு இங்கு கூடியுள்ளனர் - மெதோடிஸ்டு, பாப்டிஸ்டு, கத்தோலிக்கர், பிரஸ்பிடேரியன், பெந்தெகொஸ்தேயினர் என்று வெவ்வேறு அடையாளங்களை (brand) தங்கள் மேல் கொண்டுள்ளனர். நீர் இப்படிப்பட்ட அடையாளங்களைக் காண்பதில்லை. நீர் இரத்த சீட்டை (blood tag) மாத்திரமே காண்கிறீர். பரலோகப் பிதாவே, ஜனங்கள் இன்றிரவு தாங்கள் அணிந்துள்ள அடையாளத்தை (brand) புறக்கணித்து, பெந்தெகொஸ்தே என்பது ஒரு ஸ்தாபனம் அல்லவென்றும், அது உம்மை விசுவாசிக்கும் எந்த மனிதனும், ஸ்திரீயும் பெறும் அனுபவம் என்பதையும் நினைவுகூர வேண்டுமென்று வேண்டிக்கொள்கிறேன். கர்த்தாவே, வியாதியஸ்தரை குணமாக்கும், இழந்து போனவர்களை இரட்சியும், மகிமையை நீர் எடுத்துக்கொள்ளும். இங்கு கூடியுள்ளோரை என் கொச்சை வார்த்தைகளுடன் உம்மிடம் சமர்ப்பிக்கிறேன். கர்த்தாவே, நான் சொல்வன்மை படைத்தவன் அல்ல. உமது வார்த்தையைப் பேசுவதற்கு நான் குறைவுள்ளவன். ஆனால் பரிசுத்த ஆவி தாமே இவைகளைக் கையாண்டு, எந்த நோக்கத்துடன் அவை அளிக்கப்பட்டனவோ, அதை அவர்களுக்கு வெளிப்படுத்துவாரென நம்புகிறேன். தரத்தில் குறைந்தவன் என்னும் எண்ணம் அல்ல, ஆனால் தாழ்மையான உணர்ச்சி கொண்டு... வித்தியாசமாயிருக்க வேண்டும் என்னும் எண்ணம் அல்ல. ஆனால் தேவனிடம் நான் எப்படியிருக்க விரும்புகிறேனோ, அவ்வாறே ஜனங்களிடம் உண்மையாகவும் உத்தமமாகவும் இருக்க. அவருடைய பிள்ளைகளுடன் நான் உத்தமமாயிராவிடில், அவருடன் எப்படி உத்தமமாயிருக்க முடியும்? தேவனே, இதை இன்றிரவு ஜனங்களின் முன்னிலையில் உறுதிப்படுத்தித் தர வேண்டுமென்று ஜெபிக்கிறேன். அவர்கள் காலத்தின் நிழல்களில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் என்றும், இந்த நேரத்தின் செய்தி, மனந்திரும்பி, பிதாக்களின் விசுவாசத்துக்கு திரும்ப வேண்டும் என்பதே என்றும் அவர்கள் அறிந்து கொள்ளும்படி செய்யும். அதை அருள்வீராக. அதை உம்மிடம் சமர்ப்பிக்கிறேன். பாவிகளை இரட்சியும், விசுவாசிகளை நிரப்பும், வியாதியஸ்தரை சுகப்படுத்தும், மகிமையைக் கொண்டு வாரும். நாங்கள் அனைவரும் ஒரே சத்தத்துடன், ''இன்னும் ஒரு விசை, கர்த்தாவே, இன்னும் ஒரு விசை'' என்று கதறுவோமாக. அது இன்னும் ஒரு விசை நடக்கட்டும். இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம். 84உங்கள் தலைகள் வணங்கியிருக்கும் இந்நேரத்தில், ஜெப சிந்தையுடன், ''கர்த்தாவே, அது நானோ? நான் என்ன செய்யட்டும்? நான் என்ன செய்ய வேண்டும்?,'' என்று கேட்பீர்களா? இசை மிருதுவாக இசைக்கப்படும் இந்நேரத்தில் உங்களை ஆராய்ந்து பாருங்கள், கொச்சை மொழியில் அளிக்கப்பட்ட செய்தியை சற்று யோசித்து பாருங்கள், செய்தியளித்தவரை நோக்க வேண்டாம். செய்தி என்னவென்று சிந்தித்து பாருங்கள். உங்களுக்குத் தேவன் அவசியம் என்று நீங்கள் உணருவீர்களானால், உங்கள் தலை வணங்கியிருக்கும் போது மெல்ல கைகளையுயர்த்தி, ''கர்த்தாவே, என்னை நினைவு கூரும்,'' என்று சொல்லுங்கள். உங்கள் தேவை எதுவாயிருப்பினும் கவலையில்லை. ''ஓ, கர்த்தாவே, என்னை நினைவு கூரும்.'' இப்பொழுது தேவனிடத்தில், விசுவாசமுள்ளவர்களாயிருங்கள். சந்தேகப்படாதீர்கள். விசுவாசமுள்ளவர்களாயிருங்கள். தேவன் உங்களிடத்தில் பேசும் வரைக்கும் உங்கள் விண்ணப்பங்களை இறுகப் பற்றிக் கொண்டு, ''என் விண்ணப்பங்களை உம்மிடம் சமர்ப்பிக்கிறேன்'' என்று கூறுங்கள். ''கர்த்தாவே, நான் குருடாக்கப்பட்ட நிலையில் இருக்கிறேன். என்னைக் குறித்து நான் வெட்கப்படுகிறேன். நான் கிறிஸ்தவன் என்று என்னை அழைத்துக் கொண்டு, இப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்ந்து வருகிறேன், என்னைக் குறித்து நான் வெட்கப்படுகிறேன். கர்த்தாவே, என் மேல் இரங்கும். என்னை சுகப்படுத்தும்! ஆவிக்குரிய பிரகாரமாகவும், சரீரப்பிரகாரமாகவும் என்னை சுகப்படுத்தும்; என்னை உம்முடையவனாக்கிக்கொள்ளும். உமது ஆவி என் மேல் இருப்பதை உணருகிறேன். நீர் எங்களுடன் கூட இருப்பதாக சகோ. பிரன்ஹாம் கூறினார். அதை இப்பொழுது நான் உணர்ந்தேன், நீர் இங்கே இருக்கிறீர் என்று நான் அறிகிறேன்,'' பரலோகத்தின் தேவன் தாமே உங்கள் ஜெபத்துக்கு பதிலளிப்பார். இப்பொழுது விசுவாசியுங்கள். செய்தியானது உங்களுக்குள் ஆழமாக பதியட்டும். ஜெபம் பண்ணுங்கள், விசுவாசமுள்ளவர்களாயிருங்கள், சந்தேகப்படாதீர்கள், விசுவாசியுங்கள். 85கர்த்தாவே, மனிதரும், ஸ்திரீகளும், பையன்களும், பெண்களும் ஆலாசனை செய்து பார்ப்பதற்காக இந்த நேரத்தை அவர்களுக்குக் கொடுத்தேன். இது சிலருக்கு வினோதமான செய்தியாயிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், கர்த்தாவே, அது உண்மையென்று நீர் அறிவீர். இன்று பிற்பகல் நான் அறையில் உட்கார்ந்து கொண்டிருந்த போது, ஒரு காலத்தில் உமக்கென்று வாழ்ந்த மனிதனையும், அவன் அடைந்த நிலையையும் என் ஞாபகத்துக்கு கொண்டு வந்தீர். இப்பொழுதும் பிதாவே, சிம்சோன் தனக்குத் தானே மரிக்க ஆயத்தமாயிருந்தது போன்று; தேவனுடைய வெற்றியையும் வாக்குத்தத்தையும் கொண்டு வர அவன்தன் சத்துருவுடன் மரிக்க ஆயத்தமாயிருந்தது போன்று, நாங்களும் ஸதாபன மார்க்கங்களுக்கும் எங்களில் காணப்படும் வேறுபாடுகளுக்கும், எங்கள் சுயசிந்தனைக்கும் மரித்து, உமது வார்த்தையை ஏற்றுக்கொள்ளும்படி செய்யும். ''அற்புதங்களின் நாட்கள் கடந்துவிட்டன,'' என்று எங்களுக்கு உரைக்கப்பட்டபடியால் நாங்கள் கொண்டுள்ள அக்கருத்துக்கு நாங்கள் மரிக்கும்படி செய்யும். ஏனெனில், இயேசுகிறிஸ்து நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார் என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம். கர்த்தாவே இங்கு கூடியுள்ளோர் தேவனுடைய கரம் அசைவதை இன்னும் ஒரு விசை காணவும், அவர்கள் வந்து மனந்திரும்பி, ஒரு பெரிய கூட்டம் உண்டாகவும் அருள் புரியும். இந்த சிறு சபையிலிருந்து ஒரு எழுப்புதல் புறப்பட்டு சென்று, உலக இச்சை என்னும் பெலிஸ்தரை தேசம் முழுவதும் கொன்று போடும் ஒன்றாக அது இருப்பதாக. ஜனங்கள் இன்றிரவு இங்கிருந்து புறப்பட்டுச் செல்லும் போது, அது ஒரு உதாரணமாக அமைவதாக. 86நீர் எம்மாவூருக்குச் சென்ற பாதையில் காட்சி தந்தது போல் இப்பொழுது வர வேண்டுமென்று ஜெபிக்கிறோம். அந்த மனிதர்களுடன் நீர் நாள் முழுவதும் பேசினர். அவர்கள் உம்மைக் குறித்து பேசிக்கொண்டு சென்றனர். நீர் அவர்களுடன் நேரடியாக பேசினீர், அப்படியிருந்தும் அவர்கள் உம்மை கண்டு கொள்ளவில்லை. கர்த்தாவே, இங்குள்ள அநேகர் உத்தமத்துடன் சபைக்குச் செல்கின்றனர். அவர்களுக்கு வித்தியாசமாக ஒன்றும் அங்கு போதிப்பதில்லை. ஆனால் நீர் எம்மாவூர் சீஷர்களுடன் அன்றிரவு அறைக்குள் பிரவேசித்து, கதவை மூடினபோது, நீர் சிலுவையில் அறையபடுவதற்கு முன்பு புரிந்த ஒரு செயலை அங்கு புரிந்தீர். அப்பொழுது நீர் மரித்தோரிலிருந்து எழுந்தீர் என்பதை அறிந்து கொண்டனர். அவர்கள் வேகமான பாதங்களுடனும் மகிழ்ச்சி கொண்ட இருதயங்களுடனும் விரைந்து சென்று சீஷர்களிடம் அதைக் கூறினர். அவர்கள், ''வழியிலே அவர் நம்முடனே பேசின போது, நம்முடைய இருதயம் நமக்குள்ளே கொழுந்து விட்டு எரியவில்லையா?,'' என்றனர். கர்த்தாவே அது இன்னும் ஒரு விசை நடக்க அருள் புரியும். இந்த கூட்டத்தின் மத்தியில் நீர் வந்து, நீர் சிலுவையிலறையப்படுவதற்கு முன்பு புரிந்த செயல்களைப் புரியும். அப்பொழுது உம்முடைய அப்பிரயோ ஜனமற்ற ஊழியக்காரன் அவர்களிடம் பொய் சொல்லவில்லையென்றும், அவர்களிடம் உண்மையே கூறினார் என்பதையும் அறிந்து கொள்வார்கள். இயேசுவின் நாமத்தில் வேண்டிக் கொள்கிறோம். ஆமென். 87நம்மிடம் ஜெப அட்டைகள் இருந்தாலும், ஜெப வரிசையை அழைக்க நமக்கு ஒரு வழியும் இல்லை. ஜெப வரிசை இல்லை என்று நினைக்கிறேன். சில இரவுகளுக்கு முன்பிருந்தே நாம் ஜெப அட்டைகளைக் கொடுத்து வருகிறோம். இன்றிரவு அவர்கள் ஜெப அட்டைகளை கொடுக்கவில்லையென்று நினைக்கிறேன். அவர்கள் இங்கு அட்டைகளை வைத்திருக்கின்றனர். அவர்கள் ஜெப அட்டைகளை கொடுத்திருந்தாலும், குழப்பமான இந்நிலையில், ஜெப வரிசையை அமைத்திருக்க முடியாது. நாம் முடித்து விடுவோம். இங்குள்ள எத்தனை பேர் வியாதியாயிருக்கின்றீர்கள்? உங்கள் கரங்களை நாங்கள் காணட்டும். உங்களுக்கு தேவன் அவசியமாயிருந்தால், உங்கள் கரங்களையுயர்த்துங்கள், அல்லது வேறு யாருக்காவது அவசியமிருக்குமானால், அவர்கள் சார்பாக உங்கள் கரங்களையுயர்த்துங்கள். ஜெபத்தில் தரித்திருங்கள். 88இப்பொழுது பயபக்தியாயிருங்கள். இந்த செய்தியை கிரகித்துக்கொள்ள நாம் தவற வேண்டாம். இந்த ''சூட்டுடன் இயேசு இங்கு நின்று கொண்டிருந்து, நீங்கள் மேடையின் மேல் அவரிடம் ஓடிச் சென்று, ''கர்த்தராகிய இயேசுவே, என்னை சுகமாக்கும்'' என்று கேட்பீர்களானால், அவர் என்ன பதில் கூறுவார் தெரியுமா? ''நான் ஏற்கனவே அதை செய்து முடித்து விட்டேன்'' நமது மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டார், அவருடைய தழும்புகளால் நாம் குணமானோம். கிரயம் ஏற்கனவே செலுத்தப்பட்டுவிட்டது. நீங்கள் அதை விசுவாசிக்க வேண்டும். நீங்கள், “அவர் எனக்கு அருகாமையில் இருக்கிறார் என்று என்னால் விசுவாசிக்க முடியுமானால், அவர் இங்கிருக்கிறார் என்று எனக்குத் தெரிந்தால்... அது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு,'' எனலாம். நல்லது, அவர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார் என்று வேதம் கூறுகிறது. அவரைக் காண நாம் விரும்புகிறோம். அவரை நாம் காண்போமானால், அவர் முன்பு செய்தது போலவே இப்பொழுதும் செய்வார். 89இப்பொழுது போதகர் சகோதரராகிய உங்களுக்கு சில வேத வாக்கியங்களை எடுத்துரைக்கப் போகின்றேன். ''நமது பலவீனங்களைக் குறித்து பரிதபிக்கக்கூடிய பிரதான ஆசாரியர்'' என்று புதிய ஏற்பாடு கூறுகின்றது. அது சரியா? அவர் உலகில் இருந்த போது பிரதான ஆசாரியராயிருந்தார். ஏன், அவர் அதைக் காட்டிலும் மேலானவர், அவர் தேவன். அவரிடம் ஜனங்கள் எவ்வாறு ஒன்றைப் பெற முடிந்தது? ஒரு ஸ்திரீ அவருடைய வஸ்திரத்தைத் தொட்டுவிட்டு, போய் உட்கார்ந்து கொண்டாள். இயேசு திரும்பிப் பார்த்து, “என்னைத் தொட்டது யார்?” என்றார். எல்லோரும் மறுத்தனர். ஆனால் அவர். அவருக்குள் இருந்து, அவரை இம்மானுவேலாக்கிய தேவனுடைய ஆவி அந்த ஸ்திரீயை கூட்டத்தில் கண்டு பிடிக்கும் வரைக்கும் சுற்றிலும் பார்த்துக் கொண்டிருந்தது. அவளுடைய நிலை என்னவென்று அவர் எடுத்துரைத்து, ''உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது '' என்றார். அது சரியா? நல்லது, அவர் நம்முடைய பலவீனங்களைக் குறித்து தொடப்படக்கூடிய பிரதான ஆசாரியராக முன்பிருந்து, அவர் அதே பிரதான ஆசாரியராக இன்றும் இருப்பாரானால், அவர் அதே கிரியையை செய்வார். 90நீங்கள் எனக்கு அந்நியர்கள், உங்களில் அநேகர், முன் வரிசையில் உட்கார்ந்து கொண்டிருக்கும் சகோ. டால்டனையும் அவருடன் கூட உள்ளவர்களையும் எனக்குத் தெரியும். ஏனெனில், அவர்கள் கென்டக்கியைச் சேர்ந்தவர்கள். அவர்களை பல ஆண்டுகளாக எனக்குத் தெரியும். நான் தவறாக உரைக்கவில்லையென்றால், பின் வரிசையில் சகோ. ஜீன் கோடையும், (Gene Goad), சகோ. லியோ மெர்ஸியரையும் கண்டேன் என்று எண்ணுகிறேன். எனக்கு நிச்சயமாக தெரியவில்லை. சகோதரராகிய உங்களைக் காண்பதில் மகிழ்ச்சி. சகோ. சகோதரி டெள இங்கு உட்கார்ந்திருப்பதைக் காண்கிறேன். உங்களுக்கு கோளாறு ஏதாகிலும் இருந்தால், சற்று பொறுத்திருங்கள், இப்பொழுது வேண்டாம். என்னை அறியாதவர்களையும், அவர்களை எனக்குத் தெரியாது என்று அறிந்திருப்பவர்கள் உரைக்கப்பட்ட வார்த்தை மாத்திரமே எனக்குத் தேவை. நீங்கள் ஜெபம் செய்து கொண்டிருங்கள். 91அவர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருப்பாரானால், நீங்கள் அவருடைய வஸ்திரத்தைத் தொடும்போது, அவருடைய பரிசுத்த ஆவி எங்கள் மூலம் கிரியை செய்வார். உங்களுக்கு சரியான வாய்க்கால் - அதாவது நீங்கள் விசுவாசிப்பதற்கென்று அந்த ஆவி இருக்குமானால், இங்குள்ள அதே வாய்க்கால் அதே விதமாக கிரியை செய்யும். அது அப்படித்தான் கிரியை செய்ய வேண்டும். ஏனெனில், அது தேவன்! ஒரு ஆப்பிள் மரத்திலுள்ள சத்தை, ஒரு 'பீச்' மரத்துக்குள் (Peach teee) நீங்கள் செலுத்தினால், அது இனி ஒருபோதும், 'பீச்' பழங்களைக் கொடுக்காது, அது ஆப்பிள் பழங்களையே தரும். அது போன்று, நீங்கள் கிறிஸ்துவின் ஆவியை மரித்துப் போகக் கூடிய (mortal) ஒரு மனிதனுக்குள் செலுத்தினால், அவன் ஆவியின் கனிகளைத் தருவான். அவன் உயிர்த்தெழுதலின் கனிகளைத் தருவான். 92கிறிஸ்து ஒரு செய்தியை சபைக்கு அளித்து அதை உலகமெங்கும் சர்வசிருஷ்டிக்கும் கொண்டு செல்லக் கட்டளையிட்டார். கோடிக்கணக்கானவர் அதை இன்னும் கேட்கவில்லை. தேசங்கள் அதை இன்னும் கேட்கவில்லை. எவ்வளவு தூரத்துக்கு? ''உலகமெங்கும், சர்வ சிருஷ்டிக்கும். விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் தொடரும்.'' யாருக்கு? ''சர்வசிருஷ்டிக்கு.'' அப்படித்தான் அவர் அங்கு சபைக்குக் கட்டளையிட்டார். அந்த கட்டளையை அவர் எடுத்துப் போட்டதாக நீங்கள் வேதத்திலிருந்து எனக்குக் காண்பியுங்கள். மனிதன் தன் சொந்த கருத்துக்களை நுழைக்கக் கூடும், ஆனால், அது தேவனுடைய கருத்து அல்ல. அவர், ''உலகமெங்கும், சர்வ சிருஷ்டிக்கும்'' என்றார்.